கோவை நீதிமன்ற வளாகத்தில் இளைஞரைக் கொலை செய்ய முயன்ற மூவர் குண்டர் சட்டத்தில் கைது

கோவை : கோவை நீதிமன்ற வளாகத்தில் வைத்து இளைஞரைக் கொலை செய்ய முயன்ற மூவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

கோவை : கோவை நீதிமன்ற வளாகத்தில் வைத்து இளைஞரைக் கொலை செய்ய முயன்ற மூவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

கோவை சுங்கம் காமாட்சியம்மன் கோவலை தெருவைச் சேர்ந்தவர் சூர்யா(22). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் சூர்யா தான் வைத்திருந்த கத்தியால் கார்த்திக்கை குத்தினார். இதுதொடர்பாக கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்த ராமநாதபுரம் போலீஸார் சூர்யாவைக் கைது செய்தனர். இந்த வழக்கில் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த சூர்யா கோவை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு வந்தார். 

இந்நிலையில் நவம்பர் 24 ஆம் தேதி கையெழுத்திடுவதற்காக மாவட்ட நீதிமன்றத்துக்கு வந்தார். அப்போது கார்த்திக்கின் சகோதரர் தீபக்(22), அவரது நண்பர்கள் சச்சின்(20), சுஜித்(23) ஆகியோர் நீதிமன்ற வளாகத்தில் வைத்து சூர்யாவை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கினர். இதில் அவர் பலத்த காயமடைந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீஸார் வழக்குப்பதிவு செய்து மூவரையும் கைது செய்தனர். இந்நிலையில் மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் உத்தரவின் பேரில் மூவரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இந்த நகல் கோவை மத்திய சிறை நிர்வாகத்தில் கொடுக்கப்பட்டது.

Newsletter

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...