திருப்பூர் : திருப்பூரில் விவசாய நிலங்களின் வழியாக உயர்மின் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாய சங்கங்கள் சார்பில் 3 -வது நாளாக செயற்கை முறையில் உயர்மின் கோபுரங்கள் அமைத்துத் தொங்கிய படி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மத்திய அரசின் பவர் கிரிட் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் சார்பில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை விவசாய நிலங்கள் வழியே மின் கோபுரம் அமைத்துக் கொண்டு செல்லத் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதனை எதிர்த்து தமிழகத்தை சேர்ந்த 8 மாவட்டங்களில் விவசாயிகள் காத்திருக்கும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து, திருப்பூர், கோவை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளதாகவும், விவசாய நிலங்களில் கோபுரங்கள் அமைத்து மின்சாரம் கொண்டு செல்லாமல் நெடுஞ்சாலை ஓரங்களில் கேபிள் வழியாகக் கொண்டு செல்லக் கோரியும், மத்திய மாநில அரசுகளைக் கண்டித்தும் விவசாய நிலங்களின் மீது கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கள்ளிபாளையத்திலும் தொடர் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், இன்று 3 -வது நாளாக நடைபெற்ற இந்த போராட்டத்தில் மின் கோபுரங்கள் போன்று அமைத்து அதில் தொங்கிய படியே விவசாயிகள், மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து கோக்ஷங்களை எழுப்பியும், ஒப்பாரி வைத்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.