புதுஹட்டி - துளிதலை சாலையை விரைந்து சீரமைக்கக் கோரி மனு

நீலகிரி : புதுஹட்டி - துளிதலை சாலையை சீரமைக்கும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்ட மக்கள் மனு அளித்தனர்.

நீலகிரி : புதுஹட்டி - துளிதலை சாலையை சீரமைக்கும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்ட மக்கள் மனு அளித்தனர்.

நீலகிரி மாவட்டம் உதகையை அடுத்த துளிதலை நடு ஹட்டி கிராமத்தில் சுமார் 500 -க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் கடந்த ஓர் ஆண்டுக் காலத்தில் 4 முறை மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் சாலை சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள மனு அளித்தும் சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர்.



இதற்கிடையில், கடந்த 7 மாதங்களுக்கு முன்பு சாலை சீரமைப்பு பணிகள் பெயரளவில் தொடங்கப்பட்டதை அடுத்து, அன்று முதல் பள்ளி வாகனங்கள் மற்றும் அரசு பேருந்து சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால் பள்ளி மாணவர்கள் சுமார் 2 கி.மீ நடந்து சென்று வாகனங்களில் ஏறி பள்ளி செல்ல வேண்டியுள்ளது. மேலும், முதியவர்கள் மற்றும் உடல் நலம் குன்றியோர் போக்குவரத்து சேவை இன்றி மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். 

இது தொடர்பாக திட்ட இயக்குநர் மற்றும் அலுவலகம் வட்டார வளர்ச்சி அலுவலகங்களுக்குப் பலமுறை நேரில் சென்று விசாரித்த போதும் அதிகாரிகளிடமிருந்து முறையான பதில்கள் எதுவும் வரவில்லை போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்த மக்கள், கிராமசாலை பணியை விரைந்து சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். 

Newsletter

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...