தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தை எஸ்.சி பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் : புதிய தமிழகம் கட்சி தலைவர் கோரிக்கை

கோவை: தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை எஸ்.சி பட்டியலில் இருந்து வெளியேற்ற வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி பொதுமக்களுடன் வந்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தார்.

கோவை: தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை எஸ்.சி பட்டியலில் இருந்து வெளியேற்ற வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி பொதுமக்களுடன் வந்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தார்.



தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை எஸ்.சி பட்டியலில் இருந்து வெளியேற்றும் வகையில் அரசாணை பிறப்பிக்க கோரி புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் மற்றும் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை சேர்ந்தவர்கள் பல்வேறு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மனு அளித்தும், போராட்டங்களை நடத்தியும் வருகின்றனர்.

அதன்படி, கோவையில் இன்று அக்கட்சி தலைவர் தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில், தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்த கிருஷ்ணசாமி பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், "தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்களை எஸ்.சி பட்டியலில் இருந்து வெளியேற்ற கோரியும், மேலும் அதற்கு உரிய அரசாணை பிறப்பிக்க வலியுறுத்தியும் நாங்கள் நீண்ட காலமாக போராடி வருகிறோம். எனவே, எங்களது நீண்ட நாள் கோரிக்கையை உடனடியாக அரசு பரிசீலனை செய்து மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் பட்டியில் இருந்து விடுவித்து அரசாணையை வெளியிட வேண்டும்.

எங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் வரை நாங்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம். கடந்த 10 நாட்களாக, 14 மாவட்ட மக்களோடு அந்தந்த மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தேன். கோரிக்கையை நிறைவேற்ற மாநில அரசுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை, இதனால் அரசுக்கு எவ்வித பொருளாதார பாதிப்பும் ஏற்படப்போவது இல்லை.

தேவேந்திர குல வேளாளர் சமுதாயம் ஆண்டாண்டு காலமாக விவசாய தொழில் செய்து வருகிறது. அந்த மக்களை அரசு போராட்டத்திற்கு தள்ளாமல், கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்." என்றார்.

Newsletter

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...