கோவையில் மூன்றாவது நாளாக தொடரும் விவசாயிகளின் காத்திருப்புப் போராட்டம்

கோவை : விவசாய நிலத்தில் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும் மின் கோபுரத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முறையான இழப்பீடு வழங்கக் கோரியும் மூன்றாவது நாளாக விவசாயிகளின் காத்திருப்புப் போராட்டம் நடைபெறுகிறது.

கோவை : விவசாய நிலத்தில் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும் மின் கோபுரத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முறையான இழப்பீடு வழங்கக் கோரியும் மூன்றாவது நாளாக விவசாயிகளின் காத்திருப்புப் போராட்டம் நடைபெறுகிறது.



மத்திய அரசின் பவர் கிரிட் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் சார்பில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை விவசாய நிலங்கள் வழியே மின் கோபுரம் அமைத்துக் கொண்டு செல்லத் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதனால் விளைநிலங்கள் பாதிப்புக்குள்ளாகும் என்பதனால் 13 மாவட்டங்களில் 8 மையங்களில் விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதையடுத்து, கோவை மாவட்டம் சுல்தான்பேட்டையில் பல நூறுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மூன்றாவது நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோவை மையத்தில் நடைபெறும் போராட்டத்தில் இன்று விவசாயத்திற்கு உபயோகப்படுத்தும் ஜெ.சி.பி., டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களை மையத்திற்கு கொண்டு வந்து கருப்பு கொடி கட்டி எதிர்ப்பைத் தெரிவித்தனர். 

இது குறித்து ஏர்முனை இளைஞர் அணி மாநிலத் துணை தலைவர் சுரேஷ் கூறுகையில், "போராட்டம் தொடரும், போராட்டத்தைத் தீவிரப்படுத்த அதன் வடிவம் நாளுக்கு நாள் மாற்றப்படும்," என்றார்.

Newsletter

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...