ரபேல் விவகாரத்தில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் ராகுல்காந்தி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை பா.ஜ.கவினர் மனு

கோவை : காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி ரபேல் விவகாரத்தில் தவறான தகவல்களை பரப்புவதாகக் கூறி அவருடைய பாராளுமன்ற பதிவியை பறிக்க வேண்டுமென பா.ஜ.கவினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.


கோவை : காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி ரபேல் விவகாரத்தில் தவறான தகவல்களை பரப்புவதாகக் கூறி அவருடைய பாராளுமன்ற பதிவியை பறிக்க வேண்டுமென பா.ஜ.கவினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். 

 

கடந்த 2007 -ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில், போர் விமானங்கள் வாங்குவதற்கான டெண்டர் கோரப்பட்டது. அதன்படி, பல்வேறு பரிசீலனைக்குப் பிறகு பிரான்ஸ் நாட்டின் டஸ்சோ நிறுவனத்திடம் இருந்து விமானங்கள் வாங்குவது என முடிவெடுக்கப்பட்டது. இதில் பறப்பதற்கு தயார் நிலையில் உள்ள விமானங்கள் 18 மற்றும் மீதமுள்ள 108 விமானங்களுக்கு தொழில்நுட்பத்தை டசோ நிறுவனம் வழங்க இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் உற்பத்தி செய்யும் என முடிவெடுக்கப்பட்டது. 

இந்நிலையில், கடந்த 2014 -ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்று பிரதமராக மோடி பதிவியேற்றார். இதையடுத்து, 2015 -ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டிற்கு சென்ற பிரதமர் மோடி 36 விமானங்கள் வாங்கப் போவதாக அறிவித்தார். காங்கிரஸ் ஆட்சியின்போது ஒரு விமானத்தின் விலை ரூ.526 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், தற்போது ஒரு விமானத்தின் விலை ரூ.1670 கோடி என மாற்றம் பெற்றுள்ளது. தொழில்நுட்ப உதவிகளை ஹெ.ஏ.எல் நிறுவனத்திற்கு டசோ வழங்கும் இருந்த முந்தைய ஒப்பந்தம் தற்போது அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

எனவே, ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில் உச்சநீதிமன்றம் விமானம் வாங்கியதில் ஊழல் எதுவும் நடைபெறவில்லை என தீர்ப்பு அளித்தது. இதையடுத்து, கோவை மாவட்ட பா.ஜ.க மாவட்ட தலைவர் நந்தகுமார் தலைமையில் அக்கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர். 



காங்கிரஸ் கட்சி தலைவர் ரபேல் போர் விமானம் ஒப்பந்தம் தொடர்பாக பாரத பிரதமர் மோடி மற்றும் மத்தியில் ஆளும் பா.ஜ.க மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் சுமத்தி வருகிறார். மேலும், நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் தவறான தகவல்களைப் பரப்பு வருவதால் அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்ப உள்ளதாகவும் தெரிவித்த பாஜகவினர் அதற்காக மாவட்ட ஆட்சியர் மூலம் மனு அளித்துள்ளனர்.

Newsletter

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...