கோவை : ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவை மாநகராட்சி, அரசு போக்குவரத்துக்கழகத்துடன் இணைந்து 60 எலக்ட்ரிக் பேருந்துகளை வாங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோவை : ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவை மாநகராட்சி, அரசு போக்குவரத்துக்கழகத்துடன் இணைந்து 60 எலக்ட்ரிக் பேருந்துகளை வாங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவை மாநகராட்சியும் இடம் பெற்றுள்ளது. இதன் அடிப்படையில் சுற்றுச்சூழலை காக்கும் விதமாகக் கோவை மாநகர பகுதிகளில் எலக்ட்ரிக் பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளன.
இது குறித்து போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஜெர்மன் குழுவினர் ஆய்வுக்காக வந்து பார்வையிட்டு சென்றுள்ளனர். அப்போது பேருந்து நிலையங்கள், நிறுத்தங்கள் என முழுவதுமாக பார்வையிட்டனர். அதன் முதற்கட்ட பணியாக 20 எலக்ட்ரிக் பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. எனினும், அதற்கான ஏற்பாடுகள் இன்னும் ஏதுவும் செய்யவில்லை," என்றார்.