கோவை : இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் உள்ளிட்ட சில இந்து அமைப்பு தலைவர்களை கொல்ல சதி திட்டம் தீட்டியதாக 7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவ்வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
கோவை : இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் உள்ளிட்ட சில இந்து அமைப்பு தலைவர்களை கொல்ல சதி திட்டம் தீட்டியதாக 7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவ்வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
சென்னையைச் சேர்ந்த ஜாபர், இஸ்மாயில், சம்சுதீன், சலாவுதீன் ஆகியோரும் கோவையில் வசிக்கும் ஆசிக், பைசல், சாகுல் என்பவர்களையும் வெரைட்டி ஹால் காவல்துறையினர், இந்து அமைப்பினரை கொலை செய்ய சதி திட்டம் தீட்டிய வழக்கில் கைது செய்தனர்.
இதையடுத்து, 7 பேர் மீதும் சட்ட விரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்கள் தடை செய்யப்பட்ட இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்துடன் தொடர்பு வைத்துள்ளதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில், மேற்பட்ட விசாரணையைத் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில், இன்று கோவையில் கைதான 3 பேர் வீடுகளிலும் திடீரென சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவை வெரைட்டிஹால் பகுதியில் உள்ள ஆசிக் என்பவரின் வீடு, உக்கடம் ஜி.எம்.நகர் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் பைசல் வீடு், குனியமுத்தூர் பகுதியில் உள்ள சாகுல் வீடு என மூவரின் வசிப்பிடங்களிலும் காலை 6 மணி முதல் சோதனை நடைபெற்று வருகின்றது.
இதையடுத்து, சோதனை நடைபெறும் இடங்களில் தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகளுக்குப் பாதுகாப்பாக கோவை மாநகர போலீசார்ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து நடைபெற்ற சோதனையின் நிறைவில், கூரிய கத்தி, ரொக்கப் பணம், சந்தேகத்திற்கு இடமான 3 புதிய செல்போன்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.