மின் கோபுரங்கள் அமைப்பதைக் கண்டித்து 2 -வது நாளாக நடைபெற்ற காத்திருப்புப் போராட்டத்தில் கும்மியடித்து விவசாயிகள் எதிர்ப்பு

திருப்பூர் : திருப்பூரில் விளைநிலங்கள் வழியே மின்சாரம் கொண்டு செல்லும் திட்டத்தை எதிர்த்து 2 -வது நாள் நீடித்த போராட்டத்தில் ஒரு பகுதியாக நேற்று இரவில் கும்மியடித்து தங்களின் போராட்டத்தை விவசாயிகள் வெளிப்படுத்தினர்.

திருப்பூர் : திருப்பூரில் விளைநிலங்கள் வழியே மின்சாரம் கொண்டு செல்லும் திட்டத்தை எதிர்த்து 2 -வது நாள் நீடித்த போராட்டத்தில் ஒரு பகுதியாக நேற்று இரவில் கும்மியடித்து தங்களின் போராட்டத்தை விவசாயிகள் வெளிப்படுத்தினர்.



மத்திய அரசின் பவர் கிரிட் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் சார்பில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை விவசாய நிலங்கள் வழியே மின் கோபுரம் அமைத்துக் கொண்டு செல்லத் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் திருப்பூர், கோவை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதனைக் கண்டித்து போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், விளை நிலங்களில் கோபுரங்கள் அமைத்து மின்சாரம் கொண்டு செல்லாமல் நெடுஞ்சாலை ஓரங்களில் கேபிள் வழியாகக் கொண்டு செல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். 

ஆனாலும், தமிழக அரசு விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமல் உள்ளது. இதையடுத்து, மத்திய மாநில அரசுகளைக் கண்டித்தும் விவசாய நிலங்களின் மீது கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமிழகத்தில் போராட்டங்கள் வெடித்தன.

அந்த காத்திருக்கும் போராட்டத்தை தமிழகத்தைச் சேர்ந்த 8 மாவட்ட விவசாயிகள் நடத்தி வருகின்றனர். நேற்று இரண்டாவது நாளாக நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்தின் ஒருபகுதியாக தங்களின் எதிர்ப்பை கும்பியடித்து வெளிப்படுத்தினர். இப்படியாக, மத்திய மாநில அரசுகளுக்கு வழிபாட்டின் மூலம் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர். 



தொடர்ந்து சுமார் 100 -க்கும் மேற்பட்ட விவசாயிகள் பல்லடம் பள்ளிபாளையம் பகுதியில் இரவில் தங்கி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...