காழ்ப்புணர்ச்சியினால் ஹெச்.ராஜா தி.மு.க, காங்கிரஸ் குறித்து வதந்தி பரப்புகிறார் : தொல்.திருமாவளவன் ஆவேசம்

கோவை : பாஜக கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவின் திமுக மீதான விமர்சனத்திற்கு விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பதிலடி கொடுத்துள்ளார்.

கோவை : பாஜக கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவின் திமுக மீதான விமர்சனத்திற்கு விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பதிலடி கொடுத்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறுகையில், "2019 நாடாளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக தி.மு.க முன் மொழிவதை வி.சி.க வழி மொழிகிறது. இந்திய அளவில் காங்கிரஸ் 5 மாநில தேர்தலில் 3 மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க யுக்திகளை வகுத்து வெற்றி பெற்றுள்ளது. இதில் தலைவராக தகுதி பெற்று ராகுல் காந்தி உயர்ந்துள்ளார்.

இதனை பொறுத்தக்கொள்ள முடியாமல், சகித்துக்கொள்ள முடியாமல் வாய்க்கு வந்தபடி எச்.ராஜா விமர்சித்து வருகிறார். மேலும், மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பாதுகாப்பு காரணங்களால் குறிப்பிட்ட சிலர் மட்டுமே மேடையில் உட்கார அனுமதியிருந்தது. இந்நிலையில், காழ்ப்புணர்ச்சியோடு எப்படியாவது திமுக தலைமையிலான கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என ஹெச்.ராஜா முயற்சிக்கிறார்.

இது போன்ற சதி திட்டத்துடன் வதந்தியைப் பரப்பும் எச்.ராஜா போன்றவர்கள் எந்த முயற்சி செய்தாலும், குட்டிக்கரணம் போட்டாலும் காங்கிரஸ் தலைமையிலான மதசார்பற்ற ஒருங்கிணைவைச் சிதறடிக்க முடியாது. மேலும், பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்யலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ள நிலையிலும், ஆளுநர் ஏன் தயங்குகிறார்? என்பது குறித்து பாஜக பதில் அளிக்க வேண்டும்," என்றார்.

மேலும், கஜா புயலுக்குத் தமிழக அரசு கேட்ட ரூ.15000 கோடி எங்கே ரூ.350 கோடி எங்கே? எனவும் கேள்வி எழுப்பிய திருமா இறுதி அறிக்கையை தர வேண்டியது மத்திய அரசின் வல்லுநர் குழு தான் என்றார். தொடர்ந்து பேசுகையில், "கஜா புயலால் 100 பேர் உயிரிழப்பு, சொந்த ஊரிலே அகதியான மக்கள் என மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டவர்களை பார்க்க நேரமில்லாத பிரதமர் மோடிக்கு நடிகை பிரியங்கா சோப்ரா திருமணத்திற்கு செல்ல நேரம் இருந்துள்ளது. 

மேலும், பிரதமர் மோடிக்கு நடிகர், நடிகைகளுக்கு, தொழிலதிபர்களுடன் பேச நேரம் இருக்கும். அதானி, அம்பானியுடன் போன்றவர்களோடு ஊர் சுற்ற முடிகிறது. ஆனால், கஜா புயல் பாதித்த மக்களைப் பார்க்க வரமுடியவில்லை. இது போன்ற 'தமிழக மக்களின் வேதனையைப் பார்த்து ரசிக்கக்கூடிய மனப்பான்மையை தான் ஸ்டாலின் சேடிஸ்ட்' என கூறியுள்ளார். 

மேகதாது, ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாக உடனடியாக அனைத்துக்கட்சி கூட்டத்தை தமிழக முதல்வர் கூட்ட வேண்டும். மைத்ரிபாலா சிறிசேனா தன்னுடைய இயலாமையை வெளிப்படுத்தக்கூடிய வகையில் செயல்பட்டு வருகிறார். ராஜபக்சே தரப்பு ஆதரவைத் தக்கவைத்துக்கொள்ள சமரச நடவடிக்கையில் அவர் ஈடுபட்டு வருகிறார். மேலும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் ஒன்றாக உறுதியாக நின்று ராஜபக்சேவை பிரதமர் நாற்காலியில் அமர தடுத்தார்கள் என்பது முக்கியமான வரலாறு," என சுட்டிக்காட்டினார். 

Newsletter

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...