கோவை : கோவை மாநகரில் மாவட்ட தொழில் மையத்தில் வரும் 28-ம் தேதி உற்பத்தி பொருட்களின் வடிவமைப்பு மற்றும் மதிப்பு மேம்படுத்துதல் பற்றிய கருத்தரங்கம் நடக்கிறது.

தமிழ்நாடு அரசின் தன்னாட்சி சேவை நிறுவனமான தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மூலம் சிறு, குறு தொழில்முனைவோர் மற்றும் குழுமம் சேர்ந்த அமைப்பினருக்கும் ஊக்கமளிக்கும் வகையில், கருத்தமர்வுகள் தொடர் பயிற்சிப் பட்டறைகள், அனுபவப் பகிர்வு மற்றும் விழிப்புணர்வுக் கல்வி ஆகியவற்றை மாநிலம் முழுவதும் நடத்தி வருகிறது.
அந்த வகையில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் வடிவமைப்பு பற்றி நுணுக்கங்கள் அறிந்து கொள்ளும் வகையில், வரும் 28-ம் தேதி கோவை மாநகரில் ஒருநாள் கருத்தரங்கம் நடத்தப்பட உள்ளது. இக்கருத்தரங்கில் வடிவமைப்புத்துறை சார்ந்த வல்லுநர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளிக்க உள்ளனர். இதன்மூலம், பலதரப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கலந்து கொண்டு பயன்பெற உள்ளனர்.
மேலும் விபரங்களுக்கும், இக்கருத்தரங்கில் தங்களின் பெயர்கள் பதிவு செய்யவும் 8668100336 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.