21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணியாகச் சென்று ஆட்சியரிடம் மனு அளித்த கிராம நிர்வாக அலுவலர்கள்

கோவை : பழைய ஓய்வூதிய திட்டம் உள்பட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.


கோவை : பழைய ஓய்வூதிய திட்டம் உள்பட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.



பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் செய்து தர வேண்டும் உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மாநிலம் தழுவிய கோரிக்கை முழக்கப் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை பேரணியில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக மகளிர் பாலிடெக்னிக்கில் இருந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பேரணியாக வந்து மனு அளித்தனர். 



இதன்பிறகு, அவர்கள் கூறுகையில், "கிராம நிர்வாக அலுவலர்கள் கடந்த 5 ஆண்டுகளாக தங்களது சொந்த செலவில் தான் இணையதள பயன்பாட்டிற்கான செலவை செய்து வருகிறோம். இதனை அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும். கிராம நிர்வாக அலுவலகத்தில் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லாத காரணத்தால் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகிறோம். குறிப்பாக, பெண்கள் இயற்கை உபாதைகள் கழிக்கக் கூட இடமில்லை. பட்டா மாறுதல் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும். மாநில அரசு தங்களது கோரிக்கைகளைப் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு வேண்டுகோள் விடுத்தனர். 



இந்தப் பேரணியில் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கை முழக்க கோஷங்களை எழுப்பியபடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



Newsletter

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...