கோவை : பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு மயக்க மருத்து செலுத்தி பிடிக்கப்பட்ட காட்டு யானை விநாயகன் முதுமலைக்கு அனுப்ப வாகனத்தில் ஏற்றப்பட்டது.
கோவை : பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு மயக்க மருத்து செலுத்தி பிடிக்கப்பட்ட காட்டு யானை விநாயகன் முதுமலைக்கு அனுப்ப வாகனத்தில் ஏற்றப்பட்டது.
கோவை மாவட்டம் தடாகம் பகுதியில் விளைநிலங்களைச் சேதப்படுத்திய காட்டு யானைகளைப் பிடிக்க வனத்துறையினர் வெகுநாட்களாக முயன்று வருகின்றனர். இந்நிலையில், நேற்று முதன்மை வனப்பாதுகாவலர் உத்தரவின் பேரில் காட்டு யானைகளைப் பிடிக்கும் பணி முடுக்கிவிடப்பட்டது.

அந்த முயற்சியில், காலை 6.30 மற்றும் 7.30 -க்கு விநாயகத்திற்கு ஊசி மூலமாக 11 மி.லி அளவிலான மயக்க மருந்து இரு முறைகளாகச் செலுத்தப்பட்டது. இதனால் கட்டுக்குள் வந்த விநாயகத்தின் இரண்டு கால்கள் கயிற்றைக் கொண்டு கட்டப்பட்டன. இந்த நடவடிக்கையில் கும்கி யானைகள் விஜய், வாசிம் மற்றும் கால்நடை மருத்துவ குழுவினர் பங்கு அளப்பரியது.

இதையடுத்து, மயக்க நிலையில் இருந்த ஆண் யானை விநாயகத்தின் கழுத்தில் ரேடியோ பட்டை ( radio collar) அணிவிக்கப்பட்டது. ஜி.பி.எஸ் பொருத்தப்பட்ட அந்த பட்டை காட்டு யானையின் ஒவ்வொரு அடியையும் கண்காணிக்க உதவும். முதுமலை காட்டிற்கு இடமாற்றியதும் அதன் செயல்பாடுகளை கவனிக்க அந்த பட்டைக் கட்டப்பட்டது.
"பிடிக்கப்பட்ட காட்டு யானை விநாயகன் பந்திபூர், முதுமலை, வயநாடு வனங்களை இணைக்கும் பகுதியில் விடப்படும்," என்றார் வனத்துறை பாதுகாவலர் தீபக் ஶ்ரீவத்சவா.