கருணாநிதி சிலைக்கு செலவிட்டதை கஜா புயல் நிவாரணமாகக் கொடுத்திருக்கலாம் : கோவையில் ஹெச்.ராஜா விமர்சனம்

கோவை : தி.மு.க தலைவர் ஸ்டாலினையும் அவருடைய செயல்பாடுகளையும் விமர்சித்து பாஜக கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

கோவை : தி.மு.க தலைவர் ஸ்டாலினையும் அவருடைய செயல்பாடுகளையும் விமர்சித்து பாஜக கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

கோவை, காந்திபுரம் பாஜக மாவட்ட தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் பேசுகையில், "மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பதிருப்பதற்கு, தமிழக மக்கள் சார்பாக நன்றி தெரிவித்து கொள்வதில் மகிழ்ச்சி. சமீபத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின், மோடியை சேடிஸ்ட் எனக் கூறியதை மக்கள் ரசிக்கவில்லை. 

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தலைமைப் பண்பு இல்லை. மேலும், தமிழகத்தில் பிரிவினை சக்திகளுக்கு திமுக அரவணைப்பு தருகிறது. மறைந்த திமுக தலைவர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில், ம.தி.மு.க, வி.சி.க கட்சிக்கு மேடையில் இடம் தராதது திமுக பொருளாளர் துரை முருகன் கூறியது போல அக்கட்சிகள் கூட்டணியில் இல்லை என்பதைக் காட்டுகிறது.

வீரப்பன் ஆதிக்கம் செலுத்திய பகுதிகளில் நக்சல் ஒருங்கிணைப்பு பணிகள் நடப்பதாக செய்தி வந்துள்ளது. தமிழகத்தில் வளர்ச்சி திட்டங்களை தீய சக்திகளான தமிழ் தேசிய பிரிவினைவாதிகள், ஆர்பன் நக்சல்கள் தடுக்கின்றனர். எனவே, நக்சல் நடமாட்டத்தைத் தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒருவேளைத் தேவைப்பட்டால் மத்திய அரசின் உதவியை பெற தமிழக அரசு தயங்க கூடாது, என்றார். 

மத்திய அரசு கஜா புயலுக்கு அளித்த நிதி குறித்த கேள்விகளுக்கு வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஹெச்.ராஜா, செய்தியாளரைப் பார்த்து மோடி எதிர்ப்பு படையின் வழக்கறிஞர் போல பேசுகிறார் என்று கூறினார். மேலும், கஜா புயல் தொடர்பாக மாநில அரசிடம் இருந்து, இறுதி அறிக்கை மத்திய அரசிற்கு வரவில்லை எனவே, ஊடகங்கள் தவறான கருத்துகளைக் வெளியிடக்கூடாது என பதிலளித்தார்.

"ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக, மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு, சீத்தாராம் யெச்சூரி உள்ளிட்டோர் ஏற்கவில்லை. அக்கூட்டணியில் தலைக்கு தலை நாட்டாமை என்ற நிலை உள்ளது. மேலும், காங்கிரஸ் மாநில தலைவர் திருநாவுக்கரசர் நிலையற்ற நபர்," என்று கூறிய ஹெச்.ராஜா, "ஈ.வெ.ரா வழி வந்தவர்கள் கோவில்களை அழித்தார்கள். வெட்கம் கெட்ட கும்பல் உள்ள துறையாக இந்து சமய அறநிலைய துறை உள்ளது. மேலும், கோவில் சிலைகள் மீட்கப்பட்டதாகக் கூறும் அமைச்சர் மா.பா பாண்டியராஜன், சிலைகள் எப்படி திருடப்பட்டது என்பதைக் கூற வேண்டும்," என்றார். 

இதற்கிடையில், பெரியார் குத்து பாடலில் நடிகர் சிம்பு விமர்சனம் செய்தது தொடர்பாகச் செய்தியாளர்கள் கேள்வி கேட்க, "தாய் நாடு, தேச பக்தி, மதம் பற்றி விமர்சித்தால் பதில் சொல்வேன். இதுபோன்ற சில்லறைத் தனத்திற்கு பதில் சொல்ல முடியாது," என ஹெச்.ராஜா பதிலளித்தார். மேலும், மறைந்த திமுக தலைவர் கருணாநிதி சிலை அமைக்கச் செலவு செய்த நிதியை, கஜா புயல் பாதித்த 4 மாவட்ட மக்களுக்கு வழங்கியிருக்கலாமே? என தி.மு.க தலைவர் ஸ்டாலினை நோக்கு ஹெச்.ராஜா கேள்வி எழுப்பினார்.

Newsletter

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...