Breaking: கோவையில் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட காட்டு யானை : கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரம்

கோவை : தடாகம் பகுதியில் விளைநிலங்களைச் சேதப்படுத்தி வந்த காட்டு யானைகளை, இன்று காலை மயக்க ஊசி செலுத்தி வனத்துறை அதிகாரிகள் பிடித்தனர்.


கோவை : தடாகம் பகுதியில் விளைநிலங்களைச் சேதப்படுத்தி வந்த காட்டு யானைகளை, இன்று காலை மயக்க ஊசி செலுத்தி வனத்துறை அதிகாரிகள் பிடித்தனர்.

கோவை மாவட்டம் தடாகம் பகுதியில் வெகுநாட்களாகவே விநாயகன், சின்னத்தம்பி என்ற இரண்டு யானைகள் பயிர்சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் கடும் நஷ்டத்தைச் சந்திக்க நேர்வதால் அவற்றை அப்புறப்படுத்தக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். தொடர்ச்சியாக மனு அளிக்கப்பட்டதையடுத்து, கடந்த மாதம் இரண்டு காட்டு யானைகளையும் பிடித்து முதுமலை வனப்பகுதியில் விட மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் உத்தரவிட்டார். 



இதற்கிடையே, யானையைப் பிடிக்க ஆட்சியர் உத்திரவிட்டும் வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காததால் சென்னையில் உள்ள முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் அலுவலகத்தைக் கோவை விவசாயிகள் நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, இரண்டு காட்டு யானைகளையும் உடனடியாக அப்புறப்படுத்தும் படி வனத்துறையினருக்கு முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, இன்று அதிகாலை 5.30 மணிக்கு விநாயகன் என்ற காட்டு யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியை வனத்துறையினர் தொடங்கினர். 



பெரிய தடாகம் அருகில் மலை அடிவாரத்தில் இருந்த 4 முதல் 5 டன் எடையுள்ள விநாயகன் என்ற காட்டு யானைக்கு வனத்துறை மருத்துவர்கள் மயக்க ஊசி செலுத்தினர். இதனால், அந்த யானை மயக்கமடைந்தது. வனத்துறை மருத்துவர் மனோகரன் தலைமையில் 4 மருத்துவர்கள் கொண்ட மருத்துவ குழுவினர் இந்தக் காட்டு யானையைக் கண்காணித்து வருகின்றனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஶ்ரீவத்சவா கூறும்போது, காட்டு யானை விநாயகன் அதன் இளம்பருவத்திற்கேற்றவாறு ஆரோக்கியமாக உள்ளது. அதன் கால்கள் இரண்டைக் கட்டியுள்ளோம். அதன் காரணமாக அது நகர வாய்ப்பேதும் இல்லை. 



மேலும், அதன் கழுத்தில் ரேடியோ காலர் அணிவிக்கப்பட்டு அதன் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படவுள்ளது என்றார்.

Newsletter

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...