கோவை : வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு காரமடை அரங்கநாதர் திருக்கோவிலில் இன்று சொர்கவாசம் திறப்பு நிகழ்வு நடந்ததைத் தொடர்ந்து அடுத்த 10 நாட்களுக்கு ராபத்து நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
கோவை : வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு காரமடை அரங்கநாதர் திருக்கோவிலில் இன்று சொர்கவாசம் திறப்பு நிகழ்வு நடந்ததைத் தொடர்ந்து அடுத்த 10 நாட்களுக்கு ராபத்து நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த காரமடையில் புகழ் பெற்ற வைணவ திருத்தலமான அருள்மிகு அரங்கநாதப் பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. கடந்த 8 -ம் தேதி சொர்க்க வாசல் திறப்பு விழா, பகல் பத்து உற்சவத்துடன் தொடங்கியது. தினமும் காலை அரங்கநாத பெருமாள் முன்பு கோவில் ஸ்தலத்தார் மற்றும் பட்டர் சுவாமிகள் திருமாழி, திருப்பாவை வாசித்துச் சிறப்பு பூஜைகள் செய்து வந்தனர்.
இதையடுத்து, 10 -ம் நாளில் இரவு அரங்கநாதப் பெருமாள் மோகினி அவதாரத்தில் நாச்சியார் திருக்கோலத்தில் எழுந்தருளினார். அதைத் தொடர்ந்து இன்று அதிகாலை 5.45 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் அரங்கநாதப் பெருமாள் ஷேச வாகனத்தில் எழுந்தருளி சொர்க்கவாசல் வழியாக வெளியே வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தர்.

முன்னதாக ராமானுஜர், நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார் ஆகியோருக்கு பரமபதவாசல் வழியே காட்சி அளித்தார். பிற்பாடு பரமபத வாசல் வழியே அரங்கநாதரைத் தரிசனம் செய்ய இரவு முதலே காத்திருந்த பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இந்த நிகழ்ச்சியினை தொடர்ந்து இன்று முதல் 10 நாட்களுக்கு ராபத்து நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது