கட்டுமானப் பணிகள் முடிவுற்றதையடுத்து கிக்கானி ரயில்வே மேம்பால சாலை பயன்பாட்டிற்கு திறப்பு

கோவை : கோவை புரூக்பாண்ட் சாலை அருகே உள்ள கிக்கானி ரயில்வே மேம்பாலப்பணிகள் துரிதமாக முடிவடைந்ததையொட்டி, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சாலை மீண்டும் திறக்கப்பட்டது.

கோவை : கோவை புரூக்பாண்ட் சாலை அருகே உள்ள கிக்கானி ரயில்வே மேம்பாலப்பணிகள் துரிதமாக முடிவடைந்ததையொட்டி, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சாலை மீண்டும் திறக்கப்பட்டது.

கோவை புரூக்பாண்ட் சாலையில் இருந்து காந்திபுரம் செல்ல பயன்படுத்தும் முக்கிய பாதையாக கிக்கானி ரயில்வே பால வழி உள்ளது. இந்த ரயில்வே பாலத்தின் வழியில் மழை நேரங்களில் நீர் தேங்கி நிற்கிறது. இதனால், இந்த சாலையை கடக்க பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். அதேபோல, இந்த பாலத்தின் கீழ் இருக்கும் நீரை உறிஞ்சி மட்டுமே எடுக்கக்கூடிய நிலை இருந்தது. இதனால், மழை நேரங்களில் இந்தப் பகுதியை கடப்பவர்கள் மற்றும் சைக்கிளில் செல்பவர்கள் கூட ரயில்வே பாலத்தின் மேல் ஏறி செல்கின்றனர். இது ஆபத்தான பயணம் என பலமுறை அறிவிக்கப்பட்டும் பொதுமக்கள் வேறுவழியின்றி சென்று வந்தனர். 



இதையடுத்து, பொது மக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த ஒரு வாரத்திற்கு முன் மழைநீர் தேங்காதவாறு சீரமைப்பு பணிகள் நடைபெற்றது. இந்த நிலையில், இன்று மாலை பணிகள் அனைத்தும் முடிவுற்று இந்த பொதுமக்களின் பயன்பாட்டிற்கு சாலை திறக்கப்பட்டது. தற்போது, வழக்கம்போல பொதுமக்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்

Newsletter

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...