கோவை : காந்தி பூங்கா அருகே இளம்பெண் ஒருவர் மதுபோதையில் நடு ரோட்டில் படுத்து கிடந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ஆர்.எஸ்.புரம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான காந்தி பார்க் அருகே சுமார் 25 மதிப்புமிக்க இளம்பெண் ஒருவர் சாலையில் முகம் குப்புறப்படுத்து கிடந்துள்ளார். இதனால், சாலையில் செல்பவர்களில் சிலர் உயிருடன் இருக்கிறாரா..? என்ற சந்தேகத்தின் பேரில் ஆர்.எஸ்.புரம் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதன்பேரில் உடனடியாக வந்த போலீசார் சோதனை செய்ததில், அந்தப் பெண் மதுபோதையில் படுத்துக் கிடப்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்தப் பெண்ணை எழுப்ப தண்ணீர் ஊற்றியும் எழுந்திருக்காததால், 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்து வரவழைத்தனர். பின்னர், வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அந்த பெண்ணுக்கு மது போதை தெளியும் ஸ்பிரே அடித்தனர். ஆனால், அந்த இளம்பெண் அப்படியும் எழுந்திருக்காததால் அந்தப் பெண்ணை சாலை பகுதியில் இருந்து அப்புறப்படுத்தி ஓரத்தில் படுக்க வைத்தனர்.

தொடர்ந்து, அந்தப் பெண்ணிடம் போலீசார் விசாரித்ததில், இந்தப் பெண் கோவை பகுதியை சேர்ந்தவர் என்பதும், இவர் அதிக அளவில் இரவில் மது குடித்த காரணத்தினால் எழுந்திருக்க முடியாமல் சாலையிலேயே படுத்து விட்டதும் தெரியவந்தது.
மது போதையில் சாலையில் கிடந்த இளம் பெண்ணை கண்ட பொதுமக்கள் அனைவரும் முகம் சுளித்து சென்றனர்.