சமூக போராளியாக போலி வேசம் போடுகிறார் கவுசல்யா : உடுமலை சங்கரின் குடும்பத்தினர் தீர்மானம்

திருப்பூர் : சமூக போராளி போன்று போலி வேசம் போட்டுக் கொண்டு சுற்றுவதாக கவுசல்யாவுக்கு எதிராக உடுமலை சங்கரின் குடும்பத்தினர் பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றினர்.

திருப்பூர் : சமூக போராளி போன்று போலி வேசம் போட்டுக் கொண்டு சுற்றுவதாக கவுசல்யாவுக்கு எதிராக உடுமலை சங்கரின் குடும்பத்தினர் பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றினர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை ஆணவ படுகொலை செய்யப்பட்ட சங்கரின் உறவினர்கள் மறுமணம் செய்து கொண்ட கவுசல்யாவிற்கு எதிராக பல்வேறு தீர்மானங்களை போட்டனர். அந்த தீர்மானங்களாவது:- சாதி ஒழிப்பு போராளி என்று சொல்லிகொண்டு அவரது சமூகத்தை சேர்ந்தவரையே மறுமணம் செய்து கொண்டார். சங்கரின் மரணத்தை மறந்து விட்டார். கவுசல்யாவுடன் சங்கரின் வீட்டிற்கு தினமும் அடையாளம் தெரியாத நபர்கள் வந்து செல்கின்றனர்.



கடந்த இரண்டு நாட்களுக்கு முன் சங்கரின் வீட்டில் பதுங்கியிருந்த சென்னையை சேர்ந்த பெண்ணை காவல்துறையினர் நள்ளிரவில் கைது செய்தனர். மத்திய அரசு பதவியில் இருந்து கொண்டு அரசுக்கு எதிராக பொதுமேடைகளில் பேசி வருவதை காவல்துறையினர் வேடிக்கை பார்த்து வருகின்றனர். கவுசல்யாவுடன் இனிமேல் யாரும் பேசவோ, அவர்கள் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு செல்லவோ கூடாது. சமூக போராளி என போலி வேசம் போட்டு சுற்றுகிறார். அரசும், காவல்துறையும் இவரை தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு சங்கரின் உறவினர்கள் தீர்மானங்கள் செய்துள்ளனர். 



அவரது தந்தை சின்னசாமிக்கு நீதிமன்றம் வழங்கிய தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க சொன்ன கவுசல்யா, சங்கருக்கு துரோகம் செய்து விட்டார். சங்கரின் சமுதாயத்தை பயன்படுத்தி உயர்ந்து கொண்டு, தற்போது தனது சொந்த சமுதாயத்தில் சக்தி என்பவரை மறுமணம் செய்து கொண்டதால், அவருடன் எந்த தொடர்பும் வைத்து கொள்வதில்லை என்றும் முடிவு செய்தனர்.

Newsletter

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...