பணி நிரந்தரம் செய்யக் கோரி கோவையில் துப்புரவு பணியாளர்கள் போராட்டம்

கோவை : ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் பணி நிரந்தரம் செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி துப்புரவு பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை : ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் பணி நிரந்தரம் செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி துப்புரவு பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை மாநகராட்சியின் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் 2,000-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் ஒப்பந்தத்தின் பேரில் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், பணிநிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாநகராட்சி அலுவலகத்தில் 200 துப்புரவு பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக போராட்டக்காரர்கள் கூறுகையில், "2,000-க்கும் மேற்பட்ட துப்புரவுப் பணியாளர்கள், 3 முதல் 15 ஆண்டுகள் வரையிலான ஒப்பந்த ஊழியர்களாக செயல்பட்டு வருகின்றனர். தற்போது, மாநகராட்சி சார்பில் ஊழியர்கள் பரிமாற்றத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்களில், 500 பேரில், 400 பேர் வெளியாட்களுக்கும், தற்போதைய பணியாளர்களில் 100 பேருக்கும் பணிக்கான அழைப்பு கொடுத்துள்ளது. கோவை மாநகராட்சி தற்போதைய ஊழியர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதே எங்களது கோரிக்கையாகும்," என்றார். இதனிடையே, இது குறித்து கோவை மாநகராட்சி ஆணையரிடம் ஊழியர்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. 

சி.ஐ.டி.யூ.வைச் சேர்ந்த கே. ரத்தன் குமார் கூறியதாவது :- ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் 2,000 ஊழியர்களை பணியில் அமர்த்த கோவை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக, 500 பேருக்கு நியமிக்கப்படுகின்றனர். வேலைவாய்ப்பு அலுவலகத்தின் பதிவு அடிப்படையில் மாநகராட்சியில் நியமிக்கப்பட்ட இந்தப் பணியாளர் தேர்வு குறித்து தற்போதைய ஊழியர்களிடம் கலந்தாலோசிக்கவில்லை. துப்புரவு பணியாளர்கள் பல்வேறு உடல்நலக் குறைபாடுகள் ஏற்பட்டாலும், தொடர்ந்து பல ஆண்டுகள் பணிபுரிகின்றனர். 1,000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் 2005-ம் ஆண்டு முதல் ஒப்பந்த ஊழியர்களாகப் பணியாற்றி வருகின்றனர். பணிமூப்பு அடிப்படையில் ஆள் தேர்வு செய்யப்படுகிறது. இந்தப் பணிக்கு கல்வித் தகுதி தேவையில்லை என்ற போதிலும், வேலைவாய்ப்பு அலுவலகத்தின் பதிவு கடைபிடிக்கப்படுகிறது. இதனால், அவர்களது வாய்ப்பு பறிக்கப்படுகிறது. இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் எந்தவித பதிலும் அளிக்கவில்லை, இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...