நீலகிரி : உதகை டென்மேரி அருகே காட்டெருமை தாக்கியதில் பணியில் ஈடுபட்டிருந்த கூலி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் அடர்ந்த வனப்பகுதியைக் கொண்ட மாவட்டமாகும். இந்த வனப் பகுதியில் யானை, சிறுத்தை, புலி, காட்டெருமை, மான், கரடி போன்ற வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.மாவட்டத்தில் அவ்வப்போது யானை, காட்டுமாடு, கரடி போன்ற வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிக்குள் வருவதும், மனிதர்களை தாக்குவதும், மனித உயிர்கள் பலியாகுவதும் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த கேசவன் (75) என்பவர் உதகை டென்மேரி பகுதியில் கற்பூர தைலம் தயாரிக்கும் கூலி வேலை செய்து வருகிறார். இவர் இன்று வழக்கம் போல, கற்பூர தைலம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது, அவ்வழியாக வந்த காட்டு மாடு ஒன்று திடீரென்று அவரை தாக்கியுள்ளது. இதில், படுகாயமடைந்த கேசவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனைத்தொடர்ந்து, வனத்துறை மற்றும் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்ததையடுத்து, அவரது உடல் உதகை அரசு தலைமை மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.