மாந்திரீக பயன்பாட்டிற்காக அடைத்து வைக்கப்பட்டிருந்த அரிய வகை விலங்கான தேவாங்கு மீட்பு

கோவை : சட்ட விரோதமாக மாந்திரீகத்திற்கு பயன்படுத்துவதற்காக அடைத்து வைக்கப்பட்டிருந்த அரிய வகை விலங்கான தேவாங்கு வன ஆர்வலர்களால் மீட்கப்பட்டது.

கோவை : சட்ட விரோதமாக மாந்திரீகத்திற்கு பயன்படுத்துவதற்காக அடைத்து வைக்கப்பட்டிருந்த அரிய வகை விலங்கான தேவாங்கு வன ஆர்வலர்களால் மீட்கப்பட்டது. 

மேட்டுப்பாளையத்தில் மாந்திரீக பயன்பாட்டிற்கு என்ற பெயரில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அரியவகை வனவிலங்கான தேவாங்கு மீட்கப்பட்டு முறைப்படி வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. சிறிய உருவத்தில், பெரிய கண்களுடன் காணப்படும் தேவாங்குகள், அடர்ந்த காடுகளில் உள்ள உயரமான மரங்களில் வசிக்கக்கூடியவை. பழங்கள், இலைகள், சிறு பூச்சிகள் போன்றவற்றை உணவாகக் கொண்டு வாழும் இவ்வகை தேவாங்குகள் அழிந்து வரும் விலங்கினங்கள் பட்டியலில் உள்ளது. இதனால், இவை வனத்துறையின் செட்யூல் 1 விலங்கினம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றைப் பிடிப்பதோ, துன்புறுத்துவதோ வனச்சட்டப்படி குற்றமாகும். 



இந்த நிலையில், மேட்டுப்பாளையத்தில் உள்ள வனபத்திரகாளியம்மன் கோவில் பின்புறம் நடைபெற்று வரும் யானைகள் நல்வாழ்வு முகாமிற்கு வந்திருந்த வன உயிரின ஆர்வலர்கள் சிலர், கோவில் முன்புறம் ஒருவர் தேவாங்கை சிறு கூண்டில் அடைத்து வைத்துக்கொண்டு தாயத்துக்களை விற்றுக்கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். தேவாங்கு மூலம் மந்திரிக்கப்பட்ட தாயத்து எனக்கூறி பலரிடம் தாயத்து விற்பனை செய்து வந்த நபரிடம் இருந்து தேவாங்கை மீட்ட வன உயிரின ஆர்வலர்கள், உடனடியாக அதனை மேட்டுப்பாளையம் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

 

இதனையடுத்து, வனத்துறையினர் தேவாங்கை பெற்று அதனை அடர்ந்த வனப்பகுதியான ஜக்கனாரி பீட் புலிக்குட்டை காட்டிற்குள் விடுவித்தனர். வனஉயிரின ஆர்வலர்கள் மற்றும் வனத்துறையினரால் சுதந்திரம் பெற்ற தேவாங்கு காட்டுக்குள் ஓடி சென்று அங்குள்ள மரத்தின் மீதேறி அதன் இயல்பான வாழ்வுக்கு திரும்பியது.

Newsletter

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...