கோவை : கோவை வைசியால் வீதி அருகே உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில், 425 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட பான் மசாலா புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கோவை : கோவை வைசியால் வீதி அருகே உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில், 425 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட பான் மசாலா புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தமிழக அரசின் உத்தரவுப்படி, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தமிழகம் முழுவதும் தொடர்ந்து பான்மசாலா, குட்கா பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்த நிலையில், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தொடர்ச்சியாக, பான் மசாலா, குட்கா பொருட்களை முழுவதும் அழிக்கும் நோக்கில் செயல்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று உணவு பாதுகாப்புத்துறையினர் டவுன்ஹால் அருகே உள்ள வைசியால் வீதி, பஜனை கோவில் வீதி போன்ற இடங்களில் ஆய்வு செய்தனர். இந்த திடீர் ஆய்வில், வைசியால் வீதி அருகே உள்ள பட்டக்கார அய்யாசாமி தெருவில் மகேஸ்வரன் என்பவருடைய குடோனில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட உணவுப் புகையிலை பொருட்களை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சுமார் 225 கிலோ அளவுள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

அதேபோல, வைசியால் வீதியில் உள்ள பல்வேறு கடைகள் மற்றும் குடோன்களில் நடத்திய ஆய்வில், மேலும் 200 கிலோ குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்தத் தடை செய்யப்பட்ட பொருட்களை பதுக்கி வைத்திருந்த நபர்களிடம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.
