கோவை : தேக்கம்பட்டி யானைகள் நல்வாழ்வு முகாமில், யானைகள் தன்னிலை மறந்து தரையில் படுத்து குறட்டை விட்டு தூங்கி வருவது பாகன்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பவானி ஆற்றங்கரையோரத்தில் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவில் யானைகளுக்கான புத்துனர்வு முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இயற்கையான சூழலில் மலை அடிவாரத்தில் நடத்தப்படும் இந்த முகாமில் 27 யானைகள் பங்கேற்றுள்ளன. யானைகளுக்கு பவானி ஆற்றில் உற்சாகக் குளியல், பசுந்தீவனம் நடைப்பயிற்சி, ஊட்டச்சத்து உணவு என உற்சாகத்தில் திகைத்துள்ள முகாம் யானைகள், தன்னிலை மறந்து தரையில் படுத்து குரட்டை விட்டு தூங்கி வருவது முகாமில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவிலில் திருப்பணிகளை மேற்கொண்டு கற் தரையில் எப்போதும் நின்றபடி இருக்கும் இந்த யானைகளுக்கு, பகல், நேரங்களில் ஓய்வு என்பது இருக்காது. எப்போதும் மக்கள் கூட்டத்தின் நடுவேயும், வாத்திய இசைகள் ஒலித்தவாறு கோவில்களில் பணிகளை செய்து வரும் யானைகள் தற்போது தனிமையில் பகல் நேரத்திலேயே, தன்னிலை மறந்து தரையில் படுத்து தூங்கி ஓய்வு எடுத்து வருவது பாகன்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
யானைகள் பொதுவாக நின்றவாறு தான் கண்களை மூடி தூங்கும் தரையில் படுத்து தூங்குவது என்பது யாரும் இதுவரை காணமுடியாத காட்சியாகும். ஆனால், இந்தப் புத்துணர்வு முகாமில் பங்கேற்றுள்ள யானைகள், இது தங்களுக்கான ஓய்வு என்பதை தற்போது உணர்ந்திருப்பதாக கூறும் பாகன்கள், தங்களின் மகிழ்ச்சியை தெரிவிக்கும் விதமாக, தரையில் உள்ள மண்ணை எடுத்து உடல் முழுவதும் பூசி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதாக தெரிவித்துள்ளனர்.