மனு அளிக்க வந்த சாலையோரம் வசிக்கும் மக்களை மிரட்டிய அதிகாரிகள், போலீசாரின் செயலால் அதிருப்தி

திருப்பூர் : திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த சாலையோரம் வசிக்கும் மக்களை மனு அளிக்க விடாமல் போலீசாரும், அதிகாரிகளும் மிரட்டி வெளியேற்றிய சம்பவம் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

திருப்பூர் : திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த சாலையோரம் வசிக்கும் மக்களை மனு அளிக்க விடாமல் போலீசாரும், அதிகாரிகளும் மிரட்டி வெளியேற்றிய சம்பவம் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

திருப்புர் கஜலட்சுமி திரையரங்கு சாலையில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக 35 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு, கடந்த ஆண்டு முதலிபாளையம் பகுதியில் வீட்டுமனை வழங்குவதற்கான ஆணை வழங்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த வாரம் இவர்கள் சாலையில் குடியிருக்கக் கூடாது மாநகராட்சி சார்பில் அப்புறப்படுத்தப்பட்டு, முதலிபாளையம் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். எனினும், இவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடம் வேறு ஒருவருடையது என அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இதனையடுத்து, இவர்களை வீரபாண்டி பகுதியில் கட்டப்பட்டு வரும் குடிசை மாற்று வாரிய கட்டிடங்களுக்கு அருகே தற்காலிகமாக தங்கி கொள்ளுமாறும், பின்னர் வீடுகள் ஒதுக்கி தருவதாகவும் தெரிவித்திருந்தனர்.



இந்த நிலையில், அந்த இடமானது தனியாருக்கு சொந்தமானது எனவும், குடிசை மாற்று வாரியத்தின் கட்டுமானப் பொருட்கள் வைத்துக் கொள்ள மட்டுமே குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், அந்த இடத்தில் தங்கக் கூடாது என விரட்டப்படுவதாகவும் தங்களுக்கு மாற்று இடம் ஏற்பாடு செய்து தருமாறும் 35 குடும்பங்களை சேர்ந்தவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கும் குறை தீர்க்கும் கூட்டத்தில் மனு அளிக்க வந்தனர். இவர்களை தடுத்த அதிகாரிகள் மற்றும் போலீசார் உள்ளே விட மறுத்தனர்.



இதனையடுத்து, மாவட்ட ஆட்சியரின் வாகனம் முன்னால் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு வந்த மாநகராட்சி உதவி ஆணையர் வாசுகுமார் மற்றும் வீரபாண்டி காவல்நிலைய ஆய்வாளர் மணிமொழி ஆகியோர் கைது செய்வதாக மிரட்டியும், தகாத வார்த்தைகளால் திட்டியும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து விரட்டி அடித்தனர். சாலையோரம் வசிக்கும் மக்களும் குடிமக்கள்தான் என எண்ணாமல், அவர்களை அலைக்கழிக்கும் அதிகாரிகள் மற்றும் காவலர்களின் செயல் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. 



இருப்பினும், தங்க இடமி்ன்றி தவித்த அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே அமர்ந்திருந்தனர். பின்னர், அவர்களை அழைத்து பேசிய மாவட்ட ஆட்சியர் பழனிசாமி, தற்போது அறிவுறுத்தப்பட்ட தற்காலிக இடத்திற்கே செல்லுமாறும், வட்டாட்சியர் மூலம் தனியார் நில உரிமையாளரிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் தெரிவித்ததையடுத்து கலைந்து சென்றனர்.

Newsletter

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...