கோவை : சட்டவிரோதமாக கல்லூரி மாணவர்களுக்கும், சிறுவர்களுக்கும் தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்து வந்த பிரபல கஞ்சா வியாபாரி யமகா ரவி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

பொம்முசெட்டி வீதியைச் சேர்ந்த பேச்சிமுத்துவின் மகன் ரவி என்ற யமகா ரவி. இவர் பல வருடங்களாக சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்து வருகிறார். கடந்த மாதம் சுண்டக்காமுத்தூர் அருகே கல்லூரி மாணவர்கள் மற்றும் சிறுவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வருவதாக கிடைத்த தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது, கஞ்சா விற்பனை செய்து வந்த ரவியை போலீசார் பிடிக்க முயற்சி செய்யும் பொழுது அவர் தப்பி ஓடியுள்ளார். பின்னர் போலீசார் ரவியை துரத்தி மடக்கிப் பிடித்தனர். தொடர்ந்து, இவர் மீது வழக்குப் பதிவு செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், கோவை மாவட்ட காவல்கண்காணிப்பாளர் பாண்டியராஜனின் சிபாரிசின் பேரில், இன்று கோவை மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன், கஞ்சா வியாபாரி ரவியை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவானது கோவை மத்திய சிறை நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டது.