குன்னூர் அருகே குட்டியுடன் உலா வரும் காட்டு யானைகளை விரட்ட முடியாமல் வனத்துறையினர் திணறல்

நீலகிரி : குன்னூர் அருகே தூதூர் மட்டம் கொலக்கம்பை பகுதிகளில் குட்டியுடன் சுற்றத் திரியும் 5 யானைகளை வனப் பகுதிக்குள் விரட்ட முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.

நீலகிரி : குன்னூர் அருகே தூதூர் மட்டம் கொலக்கம்பை பகுதிகளில் குட்டியுடன் சுற்றத் திரியும் 5 யானைகளை வனப் பகுதிக்குள் விரட்ட முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர். 

குன்னுார் அருகே தூதூர் மட்டம் பகுதியில் கடந்த சில நாட்களாக யானைகள் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது. இதேபோன்று, இந்த யானைகள் மானார், கொலக்கம்பை, தூதூர் மட்டம் பகுதிக்கு வந்து அங்குள்ள மேரக்காய் மற்றும் பீன்ஸ் உள்ளிட்ட பயிர்களை அவ்வப்போது சேதம் செய்து வருகின்றன. தொடர்ந்து, பணப்பாறை, துண்டநேரி உட்பட சுற்றுப்புறப் பகுதிகளில் இருந்த 2 ஏக்கருக்கும் மேல் இருந்த மேரக்காய் செடிகளை நாசம் செய்தன. 

பின்பு அங்கிருந்த தேயிலைத் தோட்டத்தில் முகாமிட்டுள்ள இந்த யானைகள் கூட்டம், காட்டெருமைகளின் நடமாட்டத்தால் கூட்டங்கரைப் பகுதிக்குள் வந்து விடுகின்றன. இதனைத் தொடர்ந்து, குந்தா மற்றும் குன்னூர் வனவர்கள் தலைமையிலான குழுவினர் தொடர்ந்து யானைகளைக் கண்காணித்து வருகின்றனர்.

இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், "இந்த யானைகளை நெடுகல்கொம்பை வழியாக முள்ளி வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. மேலும், யானைகளால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து விவசாயிகள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தால், ஆய்வு செய்து அதற்கான நிவாரணம் வழங்கப்படும்," என்றனர்.

Newsletter

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...