கோவை ரயில்நிலையத்தில் தபால் மூலம் பார்சல் அனுப்ப வருபவர்கள் வாகனம் நிறுத்த இடமில்லாமல் அவதி

கோவை : கோவை மத்திய ரயில்நிலையத்தின் முன்புறம் இயங்கி வரும் தபால் மூலம் பார்சல் அனுப்பும் அலுவலகத்திற்கு வருவோர் வாகனம் நிறுத்த இடமில்லாமல் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர்.

கோவை : கோவை மத்திய ரயில்நிலையத்தின் முன்புறம் இயங்கி வரும் தபால் மூலம் பார்சல் அனுப்பும் அலுவலகத்திற்கு வருவோர் வாகனம் நிறுத்த இடமில்லாமல் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர்.

தென் இந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோவையிலிருந்து பொள்ளாச்சி, பாலக்காடு, மேட்டுப்பாளையம், திருப்பூர், ஈரோடு போன்ற பகுதிகளுக்கு நாள்தோறும் மக்கள் வேலைக்காக ரயிலில் சென்று வருகின்றனர். அதேபோல், ஆர்.எம்.எஸ் எனப்படும் தபால் மூலம் பார்சல் அனுப்பவும் மக்கள் அதிக அளவில் வருகின்றனர்.



இதனிடையே, அவ்வாறு கோவையிலிருந்து செல்லும் பயணிகள் பெரும்பாலும் தங்கள் இருசக்கர வாகனத்தை ரயில் நிலையத்தில் நிறுத்திவிட்டு, அதன் பின் ரயிலில் செல்வார்கள். அதற்கு பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படும். ஆர்.எம்.எஸ் வருவோரும் பார்க்கிங் இடத்திற்கு அருகில் அலுவலகம் முன்பு வாகனங்களை நிறுத்துவது வழக்கம்.

இந்த நிலையில், கோவை மத்திய ரயில் நிலையத்தின் பின்புறம் இயங்கி வந்த இருசக்கர வாகன நிறுத்தம் மல்டிலெவல் பார்க்கிங் திட்டத்திற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், வாகனத்தை ரயில் நிலையத்தின் முன்பகுதியில் உள்ள வாகன நிறுத்தத்தில் இருசக்கர வாகனங்கள் அதிகரித்து காணப்படுகின்றன. இதன் காரணமாக, ஆர்.எம்.எஸ் அலுவலகத்திற்கு வருவோர் வாகனங்களை நிறுத்த முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இது குறித்து வெங்கடேஷ் என்பவர் கூறுகையில், "பார்சல் அனுப்ப வரும் போது வாகன நிறுத்த இடமில்லாமல் தவிக்க வேண்டி உள்ளது. பார்க்கிங் இடத்தில் நிறுத்தினால் கட்டணம். ஆனால், இங்கு நிறுத்த இடமில்லை, சாலையிலும் நிறுத்த முடியாது. ஆர்.எம்.எஸ் பார்க்கிங் என வாகனம் நிறுத்த தனி இடம் ஒதுக்க வேண்டும்," என்றார்.

இதனிடையே, வாகனங்களை கட்டண பார்க்கிங் இடத்தில் தான் நிறுத்த வேண்டும், அதற்கு கட்டணம் கொடுக்க வேண்டும் எனவும் சிலர் நிர்பந்திப்பதாகவும் புகார்கள் வருகின்றன.



இது குறித்து சமூக ஆர்வலர் கோவை கதிர் கூறுகையில், "ஆர்.எம்.எஸ் செல்வோரின் வாகனங்களை மிரட்டி பார்க்கிங் கட்டணம் வாங்குகின்றனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல, ரயில்வே நிர்வாகம் ஆர்.எம்.எஸ் செல்வோருக்கு பார்க்கிங் வசதியை மேம்படுத்தி தர வேண்டும்," என்றார்.

ஆனால், இந்த புகாருக்கு பார்க்கிங் கட்டணம் வசூலிப்போர் மறுப்பு தெரிவித்துள்ளனர். 'ஆர்.எம்.எஸ் அலுவலகம் செல்லாதவர்கள் திட்டமிட்டே அங்கே வாகனங்களை நிறுத்துகின்றனர். ஆனால், நாங்கள் அவர்களை கூட ஒன்றும் சொல்வதில்லை,' என்றனர்.

ரயில் நிலையத்தில் 4 மணி நேரம் இருசக்கர வாகனம் நிறுத்த ரூ. 10-ம், அதற்கு மேல் சென்றால் ரூ.15-ம், 24 மணி நேரத்திற்கு ரூ. 20-ம் வசூலிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்.எம்.எஸ் செல்வோரின் வாகன நிறுத்தத்திற்கு மாற்று ஏற்பாடு செய்து அவர்களின் சிரமத்தை போக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Newsletter

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...