கரூர் - கோவை இடையிலான 6 வழிச்சாலை திட்டத்தைக் கைவிடக்கோரி விவசாயிகள் மனு

கோவை : கொங்கு மண்டல விவசாயிகள் வாழ்வாதாரப் பாதுகாப்பு குழு சார்பில் விவசாயிகள், கரூர் - கோவை இடையே புதிதாக 6 வழிச்சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை : கொங்கு மண்டல விவசாயிகள் வாழ்வாதாரப் பாதுகாப்பு குழு சார்பில் விவசாயிகள், கரூர் - கோவை இடையே புதிதாக 6 வழிச்சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 

இது குறித்து அவர்கள் கூறியதாவது :- கரூர் - கோவை இடையிலான சாலை திட்டத்திற்கு விவசாய விளைநிலங்களைக் கையகப்படுத்த அரசு திட்டமிட்டு இருக்கிறது. இதனால், சுமார் 3,000 ஏக்கர் விவசாயம் நிலம் பாதிக்கப்படும். இதன் காரணமாக, ஆயிரக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதால், இத்திட்டத்தைக் கைவிட வேண்டும். இதற்கு மாற்றாக ஏற்கனவே உள்ள கரூர் - கோவை சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும்.



பெரு நிறுவனங்களுக்காக இச்சாலை திட்டத்தை செயல்படுத்த அரசு முயற்சிக்கிறது. இத்திட்டத்தை கைவிடவில்லை எனில் போராட்டங்களில் ஈடுபடுவோம், என்றனர். இந்த மனு அளிக்கும் போது, சுமார் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டிருந்தனர். 

Newsletter

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...