பூர்வீக நிலத்தை அளிக்க வலியுறுத்தி கோவையில் தலைகீழாக நடந்து வந்து மனு அளிக்க வந்தவரால் பரபரப்பு

கோவை : தங்களது பூர்வீக விவசாய நிலத்தை அளிக்க வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தலைகீழாக நடந்து வந்து மனு அளித்தவரால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை : தங்களது பூர்வீக விவசாய நிலத்தை அளிக்க வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தலைகீழாக நடந்து வந்து மனு அளித்தவரால் பரபரப்பு ஏற்பட்டது. 

கோவைபுதூர் பகுதியை சேர்ந்தவர் சத்ரபதி (53). இவர், இந்து அறநிலையத் துறையால் கையகப்படுத்தப்பட்ட தங்களுக்கு சொந்தமான பூர்விக விவசாய நிலத்தை திரும்ப அளிக்க வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தலைகீழாக நடந்து வந்து மனு அளிக்க முயன்றார். அப்போது, அங்கிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி முறையாக மனு அளிக்குமாறு கூறியதைத் தொடர்ந்து, மாவட்ட வருவாய் அலுவலரிடம் சென்று மனு அளித்தார்.



பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "குனியமுத்தூர் தருமராஜா திரொளபதி அம்மன் கோவிலில் பரம்பரையாகப் பூஜை செய்து வருகிறோம். முப்பாட்டன் காலத்தில் மன்னர் காலத்தில் பிழைத்துக் கொள்ள குலத்துப்பாளையத்தில் 1.12 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டு, அதில் விவசாயம் செய்து வந்தோம். இந்த நிலையில், பூஜை செய்யும் உரிமையை இந்து அறநிலையத்துறை பறித்துவிட்டது. அதோடு, விவசாய நிலத்தையும் அறநிலையத்துறைக்கு சொந்தமானது என விளம்பரப் பலகை வைத்துள்ளனர். எனவே, எங்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், தங்களது பூர்விக நிலத்தை தங்களுக்கே வழங்கிட வேண்டும்," என்றார். 

Newsletter

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...