கோவை : கோவையில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கட்டப்பட்ட அடுக்குமாடி கட்டிடங்களை தமிழக முதலமைச்சர் எடப்படி பழனிசாமி இன்று வீடியோ கான்பிரன்ஸ் மூலம் திறந்து வைத்தார்.

தமிழகம் முழுவதும் பல்வேறு திட்டப்பணிகளை சென்னையில் இருந்தவாறே வீடியோ கான்பிரன்ஸ் மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக, கோவை உக்கடம் மற்றும் திரு.வி.க. நகரில் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளை அவர் இன்று திறந்து வைத்தார்.

உக்கடம் திட்டப்பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அம்மன்.அர்ஜூனன், மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், மாநகராட்சி துணை ஆணையர் காந்திமதி மற்றும் குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

உக்கடம் பகுதியில் மட்டும் ரூ. 94.42 கோடி மதிப்பில் 1,392 வீடுகளும், திரு.வி.க. நகரில் ரூ. 20.56 கோடி மதிப்பீட்டில் 256 வீடுகளும் கட்டப்பட்டுள்ளன. முதற்கட்டமாக, பணிகள் முற்றிலுமாக நிறைவடைந்த வீடுகள் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கோவையின் பல்வேறு பகுதிகளை ஆக்கிரமித்து வீடுகள் அமைத்து வாழ்ந்து வந்த பொதுமக்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு இந்தப் பகுதிகளில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.