கோவை : தடாகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காட்டு யானைகளால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து வனத்துறை உயரதிகாரிகளை கோவையைச் சேர்ந்த விவசாயிகள் சென்னையில் இன்று சந்தித்து பேசுகின்றனர்.

அரசியல், மதம், சாதி அல்லாத விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் சென்னையில் இருக்கும் முதன்மை வனப் பாதுகாவலர் ரவிகாந்த் உபாதத்யாவை இன்று சந்திக்கின்றனர். இந்த சந்திப்பின் போது, தடாகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொந்தரவை ஏற்படுத்தி வரும் 2 காட்டு யானைகளைப் பிடிக்குமாறு வலியுறுத்த உள்ளனர். மேலும், இது தொடர்பாக, மனு ஒன்றையும் அளிக்கவுள்ளனர்.
"கோவை மாவட்ட வன அதிகாரிகளின் மூலம் மனித - விலங்குகள் மோதல்களை தவிர்க்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனாலும், காட்டு யானைகள் தொடர்ந்து, எங்களது பயிர்களை சேதப்படுத்தும் அசம்பாவிதத்தை தவிர்க்க முடியவில்லை," எனக் கூறுகிறார் விவசாயிகள் சங்கத்தின் உறுப்பினர்.
தடாகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சின்னதம்பி, விநாயகன் ஆகிய இரண்டு யானைகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இவற்றைக் கட்டுப்படுத்த 4 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. இதனிடையே, விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று, இரு காட்டு யானைகளைப் பிடிக்குமாறு கோவை மாவட்ட தலைமை வனப் பாதுகாவலருக்கு மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் கடிதம் ஒன்றை எழுதினார். அதனடிப்படையில், கோவை வனத்துறையினருக்கு யானைகளை பிடிக்குமாறு தலைமை வனப் பாதுகாவலர் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆணை பிறப்பித்துள்ளார். இதே கோரிக்கையை வலியுறுத்தி தமிழக வன மற்றும் பருவநிலை மாற்றத் துறையின் செயலாளர் ஷாம்பு கல்லோலிகருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
இதனிடையே, விநாயகன் யானை மேட்டுப்பாளையம் வனப் பகுதிக்கு நகர்ந்து விட்டதாகவும், சின்னதம்பி யானை மட்டுமே தடாகம் பகுதியில் சுற்றித் திரிந்து வருவதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.