கோவை : தொண்டாமுத்துர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தென்னமநல்லூர் மற்றும் மத்வராயபுரம் ஊராட்சிகளில் ரூ.2.5 கோடி மதிப்பீட்டில் புதிய பணிகளுக்கான அடிக்கல்லை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நாட்டினார்.
கோவை : தொண்டாமுத்துர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தென்னமநல்லூர் மற்றும் மத்வராயபுரம் ஊராட்சிகளில் ரூ.2.5 கோடி மதிப்பீட்டில் புதிய பணிகளுக்கான அடிக்கல்லை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நாட்டினார்.
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியம் தென்னமநல்லூர் மற்றும் மத்வராயபுரம் ஆகிய ஊராட்சிகளில் நேற்று ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் விழா மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில், மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ரூ.2.5 கோடி மதிப்பீட்டில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தனர்.

தொடர்ந்து அமைச்சர் தெரிவிக்கையில், தென்னமநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ. 9 லட்சம் மதிப்பில் 2 பயணியர் நிழற்குடை அமைக்கும் பணிக்கும், ரூ. 17 லட்சம் மதிப்பில் ஆதிதிராவிடர் காலனியில் தாய் திட்டத்தின் கீழ் உணவுக்கூடம் அமைக்கும் பணியினையும், புத்தூர் புதுக்காலனியில் ரூ. 30 லட்சம் மதிப்பில் பாவு கற்கள் பதிக்கும் பணியினையும், ரூ.27 லட்சம் மதிப்பில் நியாய விலைக்கடை அருகில் அணுகு சாலை அமைக்கவும், ரூ. 23.30 லட்சம் மதிப்பில் 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 நிலத்தடி நீர் தொட்டி அமைக்கும் பணியினை தொடங்கப்பட்டுள்ளது.
அதேபோல, காந்திக்காலனியில் ரூ. 29.30 லட்சம் மதிப்பில் பாவு கற்கள் பதிக்கும் பணி, ரூ. 25 லட்சம் மதிப்பில் சமுதாய கூடம் கட்டும் பணியினையும், ரூ. 8.70லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையம் கட்டும் பணியினையும், ரூ. 24.50லட்சம் மதிப்பில் கிராம சேவை மையம் அமைக்கும் பணியினையும், சந்தேகவுண்டன்பாளையத்தில் ரூ. 15லட்சம் மதிப்பில் சமுதாயக்கூடம் அமைக்கும் பணியினையும், மத்வராயபுரம் ஊராட்சியில் ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டத்தின் மூலம் ரூ. 35.50லட்சம் மதிப்பில் சாலை மேம்பாடு செய்யும் இரண்டு பணிகளையும், சீங்கப்பதி மலைவாழ் கிராமத்தில் ரூ. 8.70லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையம் அமைக்கும் பணியினையும் அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது, இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல, கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் பாலுகார்டனில் ரூ. 55 லட்சம் மதிப்பீட்டில் புதிய பூங்காவினை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்.
