திருப்பூர் : தாராபுரம் அருகே ரூ. 1.70 லட்சம் மதிப்புள்ள 255 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களைப் பறிமுதல் செய்த திருப்பூர் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், 3 கடைகளுக்கு அதிரடியாக சீல் வைத்தனர்.

தாராபுரத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடைகளில் வைத்து விற்பனை செய்யப்படுவதாக திருப்பூர் உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்திற்கு ரகசிய தகவல் வந்தது. இதைத் தொடர்ந்து, திருப்பூர் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் தமிழ்ச்செல்வன் தலைமையில் தாராபுரத்தில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, தாரபுரம் என்.என். பேட்டை வீதியில் உள்ள போசாராம் என்பவரின் மொத்த வியாபார மளிகைக்கடையில் விற்பனைக்கு வைத்திருந்த தடைசெய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை கைப்பற்றினா்.

அதனைத் தொடர்ந்து, அவரது சகோதரர் ஆசாராம் கடையிலும் மற்றும் தினசரி மார்க்கெட்டில் உள்ள செல்வம் என்பவரது கடையிலும் நடத்திய சோதனையில் மொத்தம் ரூ. 1 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருந்ததைக் கண்டறிந்து பறிமுதல் செய்தனர். இதனையடுத்து, முறைகேடாக குட்கா பொருட்களை விற்பனை செய்த 3 கடைகளுக்கும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சீல் வைத்து, கடைகளின் உரிமையாளர்கள் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.