கோவை : விவசாய நிலத்தில் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், மின்கோபுரத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முறையான இழப்பீடு வழங்கக் கோரியும் கோவை மாவட்டம் சுல்தான்பேட்டையில் நூறுக்கும் மேற்பட்ட விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திண்டுக்கல் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் மத்திய அரசின் பவர்கிரிட் நிறுவனமும், தமிழக அரசின் மின் தொடரமைப்பு கழகமும், விவசாய நிலங்கள் வழியாக உயர்மின் கோபுரங்கள் அமைப்பதை எதிர்த்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். கடந்த சில மாதங்களாக பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் அனுமதியின்றி பவர்கிரிட் நிறுவன ஊழியர்கள் நில அளவை செய்ய வந்த போது, உயர் மின்கோபுரங்களுக்கு எதிரான கூட்டமைப்பு மற்றும் விவசாயிகள் போராடி தடுத்தனர்.

இந்த நிலையில், விவசாய நிலங்கள் வழியாக கொண்டு செல்ல உள்ள மின்கோபுரங்களை சாலை வழியாகக் கொண்டு செல்ல வேண்டும் எனவும், மின்கோபுரங்கள் உள்ள விவசாய நிலங்களில் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவும், வருடாந்திர வாடகை வழங்கக் கோரியும் இன்று 13 மாவட்டங்களில் இருக்கும் 8 மையங்களில் இந்த காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
இது குறித்து கோவை மாவட்டம் சுல்தான் பேட்டை மையத்தில் போராடி வரும் ஏர்முனை இளைஞர் அணியைச் சார்ந்த சுரேஷ் கூறுகையில், "இந்த காத்திருப்பு போராட்டமானது விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பாக நடைபெற்று வருகிறது. எங்களது போராட்டத்திற்கு பல அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. எங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்," என்றார்.