கோவை : கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த 3 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி அருகேயுள்ள ராதாபுரம் தாலுகாவை சேர்ந்த முருகேசன் என்ற பொன் முருகேசன் (39) மற்றும் திருச்சி அருகேயுள்ள தென்னூரை சேர்ந்த ராஜசேகர் என்ற மோகன் (35) ஆகிய இருவரும் கொலை வழக்கு தொடர்பாக பெரியநாயக்கன்பாளையம் போலீசாரால் கடந்த மாதம் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதேபோல, திருப்பூர் பல்லடம் சாலையைச் சேர்ந்தவர் ஜெகன் என்ற ஜெகதீசன் என்ற மொபட் ஜெகன் (41), இவர் குற்றவழக்கு தொடர்பாக மேட்டுப்பாளையம் போலீசாரால் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இவர்களது தொடர் குற்ற நடவடிக்கையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் மூன்று பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதற்கான நகல் சிறைத்துறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது. கோவை மாவட்ட போலீசாரால் இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 25 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டைக் காட்டிலும், இந்த ஆண்டு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.