சீக்கிய கலவர வழக்கில் காங்கிரசைச் சேர்ந்த சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை

டெல்லி: 1984-ம் ஆண்டு சீக்கிய கலவர வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் சஜ்ஜன் குமாருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

டெல்லி: 1984-ம் ஆண்டு சீக்கிய கலவர வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் சஜ்ஜன் குமாருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. 

1984-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தனது சீக்கிய பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து, டெல்லி உள்பட நாடு முழுவதும் நடந்த கலவரங்களில் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். கலவரத்தின் ஒரு பகுதியாக டெல்லியில் ராஜ்நகர் பகுதியில் வசித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கொல்லப்பட்ட வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவராக இருந்த சஜ்ஜன் குமார், முன்னாள் காங்கிரஸ் கவுன்சிலர் பல்வான் கோகர், முன்னாள் கடற்படை அதிகாரி கேப்டன் பக்மால் உள்பட 6 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்தது. பல்வான் கோகர், பக்மால், கிர்தாரி லால் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை வழங்கியும், 2 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியும் விசாரணை நீதிமன்றம் கடந்த 2013-ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. ஆனால், காங்கிரஸ் மூத்த தலைவர் சஜ்ஜன் குமார் மட்டும் விடுதலை செய்யப்பட்டார்.

விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சி.பி.ஐ., டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், சஜ்ஜன் குமாரை விசாரணை நீதிமன்றம் விடுதலை செய்ததை ரத்து செய்தனர். அவர் குற்றவாளி என்று அறிவித்ததோடு, ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தனர். டிசம்பர் இறுதிக்குள் அவர் சரணடைய வேண்டும் என்றும் நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்தனர்.

Newsletter

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...