திருப்பூர் : வைகுண்ட ஏகாதசி நிகழ்ச்சியை முன்னிட்டு திருப்பூரில் பழமை வாய்ந்த பெருமாள் கோவில் பக்தர்களுக்காக ஒரு லட்சத்து 8 லட்டுகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். குறிப்பாக, அன்றைய தினம் பெருமாள் கோவிலில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில், திருப்பூர் அரிசிக்கடை வீதியில் உள்ள பழமை வாய்ந்த பெருமாள் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பிரசாதம் வழங்குவதற்காக திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஒரு லட்சத்து எட்டு லட்டுகள் தயாரிக்கும் பணி நடைபெற்றது. காலை முதல் மாலை வரை நடைபெற்ற இந்த பணியில் சுமார் 100 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர்.