கோவை : சாடிவயல் முகாமிலிருந்து பணி முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்த வேட்டை தடுப்பு காவலர் வாகன விபத்தில் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாடிவயல் முகாமில் வேட்டை தடுப்பு காவலராக பணியாற்றி வருபவர் சம்பத் குமார். இவர் பகல்நேர பணி முடிந்து, தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். மாதம்பட்டி அருகே சென்ற போது TN 64 P 4435 என்ற எண் கொண்ட டிராவல்ஸ் மினி பேருந்து, அதிவேகமாக சம்பத்குமாரின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், அவர் பலத்த காயமடைந்தார். படுகாயம் அடைந்தார். இதையடுத்து அருகே இருந்தவர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றனர். ஆனால் அதற்குள் சம்பத்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

பின்னர், அவரது உடல் கோவை அரசு மருத்துவமனையில் உள்ள பிரேத கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுனரையும், அதன் உரிமையாளரையும் போலீசார் தேடி வருகின்றனர்.