சென்னை : சென்னை அறிவாலயத்தில் கருணாநிதி திறப்பு விழாவிற்கு வந்த ராகுல் காந்தி, சிலையை வெகுவாக ரசித்த காரணத்தால் அதனைப் புகைப்படமெடுத்தார்.
சென்னை : சென்னை அறிவாலயத்தில் கருணாநிதி திறப்பு விழாவிற்கு வந்த ராகுல் காந்தி, சிலையை வெகுவாக ரசித்த காரணத்தால் அதனைப் புகைப்படமெடுத்தார்.
கடந்த ஆகஸ்ட் 7 -ம் தேதி தி.மு.க தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார். அவருடைய உடல் சகல மரியாதைகளுடன் மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் நினைவாக அண்ணா அறிவாயத்தில் அவருக்கு சிலை வைக்க ஏற்பாடுகள் நடைபெற்றது.
இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற அந்த விழாவில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, கருணாநிதியின் சிலையை திறந்து வைத்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திறக்கப்பட்ட கருணாநிதி சிலை, திமுக தொண்டர்களை மட்டுமின்றி, காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைவர் ராகுல் காந்தியையும் வெகுவாக கவர்ந்துவிட்டது.

அப்போது மேடையிலிருந்து கீழே இறங்கக் கூடிய தருணத்தில் ராகுல்காந்தி தன்னிடம் இருந்த செல்போனை எடுத்து கருணாநிதியின் சிலையைப் போட்டோ பிடித்துக் கொண்டார். கருணாநிதியின் சிலையை அவர் வெகுவாக ரசித்தது இதற்குக் காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
இதற்கடுத்து, தனது தாயார் சோனியா காந்தியுடன் மெரினா சென்று கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். ராகுல் காந்தியின் இந்தச் செயல் திமுக தொண்டர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.