யானைகள் புத்துணர்வு முகாமிற்கு வர இரண்டு வருடங்கள் காத்திருந்த கோமதி யானையின் கதை

மேட்டுப்பாளையம் பவானியாற்று கரையோரப்பகுதியான தேக்கம்பட்டியில், கோவில் யானைகளுக்கான நலவாழ்வு புத்துணர்வு முகாம் தொடங்கியுள்ளது. இந்த புத்துணர்ச்சி பெறும் முகாமில் பல உணர்வுப்பூர்வமான கதைகள் உலா வருகின்றன. அதில் யானை பாகன்களுக்கும், யானைகளுக்கும் இடையேயான பிணைப்பு அதிஅற்புத உணர்வைத் தரக்கூடியது. முகாமின் எந்த மூலையில் நின்று காணும் போதும் அந்தப் பாச பிணைப்பை நம்மால் காண முடியும் .


மேட்டுப்பாளையம் பவானியாற்று கரையோரப்பகுதியான தேக்கம்பட்டியில், கோவில் யானைகளுக்கான நலவாழ்வு புத்துணர்வு முகாம் தொடங்கியுள்ளது. இந்த புத்துணர்ச்சி பெறும் முகாமில் பல உணர்வுப்பூர்வமான கதைகள் உலா வருகின்றன. அதில் யானை பாகன்களுக்கும், யானைகளுக்கும் இடையேயான பிணைப்பு அதிஅற்புத உணர்வைத் தரக்கூடியது. முகாமின் எந்த மூலையில் நின்று காணும் போதும் அந்தப் பாச பிணைப்பை நம்மால் காண முடியும் .

அந்த முகாமில் வந்திருக்கும் எல்லா யானைகளுக்கும், அதன் பாகன்களுக்கும், அன்பையும், திடத்தையும் எடுத்துச் சொல்லும் சில கதைகள் இருக்கும். அவை கேட்கும் உறுதியான இதயங்களைக்கூட உருகச் செய்யும் வல்லமை கொண்டவை. அதே போல ஒரு யானையின் கதைதான் 25 வயது நிரம்பிய கோமதி யானையின் கதை. 

கோமதி யானை சாதாரண கோவில் யானை மட்டுமல்ல. கோழிகமுதி கும்கி யானைகள் முகாமில் தலைமை வகித்த கலீம் என்ற ஆண் கும்கியின் மகள். வனத்துறையை சேர்ந்த பிரபல கும்கி செல்வி அதன் தாய். 

மேலும், கோமதியின் யானையின் கதையில் முக்கிய கதாப்பாத்திரம் அதனுடைய பாகன் எஸ். சணல் குமாருக்கு தான். கோமதி வாய் மற்றும் பாத புண்களால் (FMD) அவதிப்படும் போது மருத்துவர்களுடன் இணைந்து சணல் குமாரும் கோமதியை நன்கு கவனித்துள்ளார். 

தமிழகத்தில் உள்ள சிவன் கோவில்களில் புகழ்பெற்ற கோவிலான சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவில் யானையான கோமதி 2016 -ம் ஆண்டில் இதே புத்துணர்வு முகாமிற்கு கிளம்பியுள்ளது. ஆனால், அப்போது நோயால் பாதிக்கப்பட்டுள்ள காரணத்தால் வர இயலாமல் போனது.

2015 -ம் ஆண்டு கோமதி யானை உடல்நலக்குறைவால் அவதிப்படுவது கால்நடைமருத்துவர்களால் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது அதனைத் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தச் சொல்லி பாகனுக்கு மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர். ஒரு கெட்ட கனவு பலிப்பது போல கோமதியின் நோய் தீவிரமடைந்தது. 

எப்போதும் குறும்புகள் செய்து கொண்டிருக்கும் கோமதியால் நோய் தீவிரமடைந்தனால் ஒரு அடி கூட எடுத்து வைத்து நடக்க முடியவில்லை. அதனைத் தேர்ந்த மருத்துவர்களிடம் காட்டி சணல் குமார் சிகிச்சை அளித்து வந்தார். ஆனாலும், அதனுடைய உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் தெரியவில்லை.

இதையடுத்து, கோமதி யானையின் புண் காயங்களின் மீது செப்டிகேமியா தாக்கியது. என்ன நடந்த போதும் கோமதியை உற்சாகப்படுத்துவதும் அதன் ஆயுளை நீட்டிக்கவும் சணல் குமார் மன உறுதியுடன் போராடி வந்தார். அவரின் நம்பிக்கைக்குப் பலனா அடுத்தகட்ட சிகிச்சையில் சிறிது முன்னேற்றம் காணப்பட்டது.

தொடர்ந்து 3 மாதங்களாக நீர்ம பாராஃபின் மற்றும் ஆமணக்கு எண்ணெய் ஆகியவற்றைச் சணல் குமார் அதீத பாசமும், நம்பிக்கையும் கலந்து கோமதியின் காயங்கள் மீது பூசி வந்தார். இதனால் மெல்ல கோமதியின் உடல்நிலை சீரானது. தற்போது முற்றிலும் குணமான கோமதி கோவில் யானைகளின் புத்துணர்வு முகாமில் கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறது. 

Newsletter

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...