கோவை : கோவை ரோட்டரி சங்கம் சமூக வளர்ச்சிக்காக உழைப்பவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கிக் கவுரவித்தது.

கோவை ரோட்டரி சங்கம் சார்பில் சமுதாய வளர்ச்சிக்கு பாடுபடும் வெவ்வேறு துறையை சேர்ந்தவர்களைக் கவுரவிக்கும் நிகழ்ச்சி ஹோட்டல் ஹெரிட்டேஜில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக ரூட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கவிதாசன் பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சியில், சமுதாயத்தின் நலனில் அக்கறை கொண்டு செயல்பட்ட சேனாதிபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மைய நிர்வாக அறங்காவலர் கார்த்திகேய சிவ சேனாதிபதி, சேவியர் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் & எண்டர்பிரெஞ்சுஷிப் தலைவர் ஆர். நந்தகோபால், கோவை உதய பி.எஸ். மேனன் (JWALAA ) ஆகியோருக்குச் சிறந்த சமூக சேவைக்கான விருது வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கவிதாசன் பேசுகையில், "கல்வியை மூன்று பிரிவுகளாக பிரிக்க முடியும் : தேர்வுகளுக்கான கல்வி, வேலைக்கான கல்வி, வாழ்க்கைக்கான கல்வி. அதில் மாணவர்கள் வாழ்க்கைக்கான கல்வியினை தேர்வு செய்தால் வாழ்க்கையில் ஜொலிக்கலாம்," என்றார். மேலும், சிறந்த சேவைக்கான விருது பெறும் கார்த்திகேய சிவ சேனாதிபதி 2017 -ம் ஆண்டில் ஜல்லிக்கட்டுக்காக போராடிய 3 மில்லியனுக்கும் மேலாக இளைஞர்களுக்குப் பின்னிருந்து உதவியது மறுக்கவியலாதது," என பாராட்டினார்.

மேலும் பேசிய அவர், "கொங்கு பகுதியைச் சேர்ந்த மக்கள் தண்ணீர் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். தொழில்நுட்பங்களுடன் வளர்ந்து கொண்டிருக்கும் சூழலில், தண்ணீருக்கான பொறுப்பையும் மக்கள் எடுத்துக்கொள்வது அவசியம்," என்றார்.
இதையடுத்து, கோவை அரசு பள்ளி சீரமைப்பு பணிகளுக்காக நிதி திரட்டும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கிரிக்கெட் போட்டிக்கான கோப்பையை வெளியிட்டார்.