நீலகிரி பழங்குடியினத்தின் முதல் பல் மருத்துவருக்குப் பாராட்டு விழா

நீலகிரி : தோடர் இன சமுதாயத்தில் முதல் பெண் பல் மருத்துவராகப் பணியாற்றவுள்ள பாரதிக்கு தோடர் சமுதாய முன்னேற்றச் சங்கம் சார்பில் பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா உதகையில் நடைபெற்றது.

நீலகிரி : தோடர் இன சமுதாயத்தில் முதல் பெண் பல் மருத்துவராகப் பணியாற்றவுள்ள பாரதிக்கு தோடர் சமுதாய முன்னேற்றச் சங்கம் சார்பில் பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா உதகையில் நடைபெற்றது.

மலைமாவட்டமான நீலகிரியில் பழம்பெரும் இனம் தோடர்களுடையது. அந்த சமுதாயத்தின் மேம்பாட்டுக்காகத் தமிழக அரசு பலதரப்பட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அவர்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தி வருகிறது. இந்நிலையில், தோடர் இனத்தைச் சேர்ந்த மந்தேஷ்குட்டன், நேரு இந்திரா தம்பதியர்களின் மகளான பாரதி மந்தேஷ் குட்டன் மருத்துவத்திற்குப் பயின்று வந்தார். 

தற்போது முழு படிப்பும் முடிந்த நிலையில் பல் மருத்துவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவருக்கு உதகையில் தோடர் சமுதாய முன்னேற்றச் சங்கம் மற்றும் தோடர் மகளிர் கூட்டமைப்பு சங்கம் சார்பில் பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா இன்று நடத்தப்பட்டது. 

பல் மருத்துவராகப் பணியாற்றவுள்ள பாரதி பேசுகையில்,"பழங்குடியின மக்களான தோடர் இனத்தில் இருந்து நான் பல் மருத்துவராகத் தேர்ச்சி பெற்றுள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது. எனது பெற்றோர்களின் முயற்சியே இதற்கு முக்கிய காரணம். என்னைப் போல் மற்ற பழங்குடியின மக்கள் தங்களது பிள்ளைகளைக் கல்வி பயில வைக்க வேண்டும். 

மேலும், அவர்கள் என்னைப் போல் மருத்துவராகவோ அல்லது வேறு துறைகளிலோ முன்னுக்கு வரவேண்டும் என்பதே எனது ஆசை,"என்றார். இதனைத் தொடர்ந்து நிகழ்வில் 10 -ம் வகுப்பு மற்றும் 12 -ம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்குப் பரிசு வழங்கப்பட்டது. 

Newsletter

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...