கோவை : கோவையில் 6 -வது ஆண்டாக உலகத் தமிழ் பண்பாட்டு மையம் சார்பில் தமிழறிஞர்களுக்கு விருது மற்றும் பரிசுத்தொகை வழங்கி கௌரவிக்கப்பட்டது.

நேற்று கோவை என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற உலக தமிழ் பண்பாட்டு மையம் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இஸ்ரோ செயற்கைக் கோள் ஆய்வு மைய முன்னாள் திட்ட இயக்குனர் டாக்டர். மயில்சாமி அண்ணாதுரை மற்றும் எழுத்தாளர் எஸ்.ரா என்ற எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் மையத்தின் தலைவர் நல்ல சாமி தலைமை வகித்து தாய் மொழியான தமிழைக் குறித்து சிலாகித்துப் பேச, மைய செயலர் கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியம் விருது பெறுபவர்களை அறிமுகம் செய்தார்.
இவ்விழாவில் பேசிய மயில்சாமி அண்ணாதுரை எழுத்தாளர்களின் செயல்பாடுகளையும் அவர்களின் தனித்துவம் குறித்தும் பேசினார். ஒவ்வொரு எழுத்தாளர்களை அங்கீகரிக்கும் போதும் ஒரு புது எழுத்தாளர் பிறக்கிறார் என்று கூறிய அவர் தொடர்ந்து சங்க இலக்கியத்தையும், நவீன அறிவியலையும் ஒப்பிட்டுப் பாராட்டினார். மேலும், தாய் மொழியான தமிழை மறந்து விடாமல் வளர்க்க வேண்டும் எனப் பேசினார்.
இதையடுத்து, சிறப்பு விருந்தனராகப் பங்கேற்ற மயில்துறை அண்ணாதுரை ம.பெ.சீனிவாசம் ( உ.வே.சா., தமிழறிஞர் விருது), கு.சின்னப்ப பாரதி (பெரியசாமித் துாரன் தமிழ்ப் படைப்பாளர் விருது), கி.முத்துசெழியன் ( தமிழ்தொண்டர் விருது ) ஆகியோருக்கு விருதுகளை வழங்கிக் கௌரவப்படுத்தினார்.
மேலும், அவ்விழாவில் டாக்டர். கிருஷ்ணன் சுவாமிநாதன் எழுதிய "சாமானியனும் சர்க்கரை நோயும்" எனும் நூலை மையத் தலைவர் நல்லசாமி வெளியிட எழுத்தாளர் வரலோட்டி ரெங்கசாமி பெற்றுக்கொண்டார். இதற்கிடையில், சமீபமாக சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பேசும் போது தாய் மொழியான தமிழையும், இலக்கியங்களையும் நாம் ஒருபோதும் இழந்துவிடக் கூடாது, தமிழ் போல வேறு மொழி கிடையாது என்றார். மேலும், விருது பெற்றவர்களையும் வாழ்த்தினார்.