இந்திய எல்லைப் பகுதிகளில் பறக்கும் விமானங்களில் இணைய வசதி

இந்திய எல்லைப் பகுதிகளில் பறக்கும் விமானங்களில் விமானங்களில் இணைய சேவை வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என விமான போக்குவரத்து செயலாளர் தெரிவித்துள்ளார்.

இந்திய எல்லைப் பகுதிகளில் பறக்கும் விமானங்களில் விமானங்களில் இணைய சேவை வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என விமான போக்குவரத்து செயலாளர் தெரிவித்துள்ளார். 

தரையில் இருக்கும் அதிவேக இணைய வசதி விமானங்களில் இருப்பதில்லை. செல்போன் பயன்படுத்தவும் அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. அதனைப் போக்கும் விதமாக இந்திய எல்லைப் பகுதிகளில் பறக்கும் விமானங்களில் இணையதள தொடர்பு வசதிகள் தொடங்கப்பட உள்ளது. 

அதற்கு அனுமதியளிக்கும் கோரிக்கைக்கு தொலைத்தொடர்புத்துறை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. நீண்ட நாட்களாக பயணிகளின் எதிர்பார்ப்பாக இருந்த இந்த வசதி தற்போது நடைமுறைக்கு வர உள்ளது. விமான போக்குவரத்து செயலாளர் ஆர்.என்.சவ்பே இந்த முக்கிய தகவலை வெளியிட்டு விமான பயணிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். 

இந்த வசதியை ஒப்பந்தம் மூலமாக ஏர்டெல், ஜியோ போன்ற பெரிய நிறுவனங்கள் ஏற்று வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னரே லுப்ட்ஹன்சா, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், கதார் ஏர்வேஸ், எமிரேட்ஸ் போன்ற வெளிநாட்டு விமானங்களில் இந்த வசதி இருந்தாலும் அந்த விமானங்களுக்கு இந்திய விமான எல்லையில் இணைய தொடர்பு கிடைப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...