கோவை : அவினாசி சாலையில் உள்ள ஹோப்ஸ் அருகே அதிவேகமாக வந்த கார், சிக்னலில் நின்று கொண்டிருந்த வாகனங்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது.

கோவை மாவட்டம் அவினாசி சாலையில் TN 37 cj 1632 என்ற எண் கொண்ட காரானது பீளமேட்டில் இருந்து அவினாசி நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அதிவேகமாகச் செலுத்தப்பட்ட அந்தக் காரானது மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே திடீரென நிலைதடுமாறி முன்னே சென்று கொண்டிருந்த கார் மீது மோதியது.

அதற்கடுத்தும் கூட வேகம் குறையாமல் அருகே சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் மற்றும் கார்கள் மீதெல்லாம் மோதியுள்ளது. இதனால் அதே வேகத்தில் வந்த மற்ற 3 கார்கள், 3 இருசக்கர வாகனம் ஆகியவற்றிற்கு லேசான விபத்து ஏற்பட்டது.
இதையடுத்து, விபத்தில் சிக்கிய 3 பேர் தனியார் மருத்துவமனையிலும் மற்றும் ஒருவர் கோவை அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருவதாக அந்தப் பகுதியில் இருப்பவர்கள் தெரிவித்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்தியவர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.