நீலகிரி : உதகை அருகே கேத்தியில் ராஜ்யசபா எம்.பி., அர்ஜூணனின் சகோதரரைத் தாக்கிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

நீலகிரி மாவட்டம் உதகை அருகேயுள்ள கேத்தியில் ராஜ்யசபா எம்பி., அர்ஜூணன் மற்றும் அவரது சகோதாரர் ஆல்துரைக்கு சொந்தமான தேயிலை தொழிற்சாலை, தேயிலை எஸ்டேட் ஆகியவை உள்ளது. இந்த தொழிற்சாலை வளாகத்தில் அவர்களது குடும்பத்துக்கு சொந்தமான பரம்பரை கோயிலும் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன் இந்த தொழிற்சாலையை விஜயராஜ் என்பவருக்கு குத்தகைக்கு கொடுத்துள்ளனர்.
இதையடுத்து, தற்போது குத்தகை காலம் முடிந்த நிலையில், விஜயராஜ் புதிய தமிழகம் கட்சியை சேர்ந்த அமுல்ராஜ் என்பவருக்கு உள் குத்தகைக்கு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. குத்தகை காலம் முடிந்த நிலையிலும் இவர்கள் இந்த தொழிற்சாலையை விட்டு செல்லாமல் இருந்துள்ளனர். இது தொடர்பான வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நடந்துள்ளது.
இந்நிலையில், ஆல்துரை கோயிலுக்கு செல்லும் போது அவரை எதிர் தரப்பினர் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவரை தாக்கியதாகக் கூறி, அந்தியூர் பகுதியை சேர்ந்த சின்னதம்பி(34), மணிகண்டன் (26), சேகர்(34), கோபியை சேர்ந்த கணேஷ்(28), அறந்தாங்கியை சேர்ந்த விசு(36) ஆகியோரை கேத்தி போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து கேத்தி போலீஸார் கூறுகையில், "ராஜ்யசபா எம்.பி., அர்சஜூணன் மற்றும் அவரது சகோதரர் ஆல்துரை ஆகியோருக்கு சொந்தமான தேயிலை தொழிற்சாலை மற்றும் கோயில் கேத்தியில் உள்ளது. இது தொடர்பாக நடந்த வழக்கில் இவர்களுக்கு சாதகமான முடிவு நீதிமன்றத்தில் வெளியாகியுள்ளது.
மேலும், கோயிலுக்கு சென்று வர எவ்வித தடையும் போடக் கூடாது என எதிர் தரப்பினருக்கு கோர்ட் உத்தரவு வழங்கியுள்ளது. இந்நிலையில், ஆல்துரை கோயிலுக்கு செல்லும் போது, அமுல்ராஜின் கட்டுப்பாட்டில் உள்ள ஆசியன் தேயிலை தொழிற்சாலையில் பணியாற்றி வரும் 5 பேர் ஆல்துரையை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, ஆல்துரை அளித்த புகாரின் பேரில், அவர்கள் கைது செய்யப்பட்டனர்," என்றனர்.