கோவையில் காணொளி காட்சி மூலம் நடைபெற்ற கூட்டத்தில் பா.ஜ.க நிர்வாகிகளின் கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதில்

கோவை : பாரதிய ஜனதா கட்சி கடந்த 4 ஆண்டுகளில் மக்களுக்காகச் செய்துள்ள பணிகளை மக்கள் மத்தியில் நிர்வாகிகள் கொண்டு செல்ல வேண்டும் என காணொளி காட்சி மூலம் நடைபெற்ற கூட்டத்தில் பா.ஜ.க நிர்வாகிகளிடம் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

கோவை : பாரதிய ஜனதா கட்சி கடந்த 4 ஆண்டுகளில் மக்களுக்காகச் செய்துள்ள பணிகளை மக்கள் மத்தியில் நிர்வாகிகள் கொண்டு செல்ல வேண்டும் என காணொளி காட்சி மூலம் நடைபெற்ற கூட்டத்தில் பா.ஜ.க நிர்வாகிகளிடம் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

கோவை, சேலம், நீலகிரி, நாமக்கல், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பாரதிய ஜனதா கட்சி வலுவாக உள்ளதாகக் கருதப்படுகிறது. இந்த ஐந்து பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி இன்று காணொளிக் காட்சி மூலம் உரையாடினார். கோவையில் சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் கோவை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஏராளமான பாஜக நிர்வாகிகள் கலந்துகொண்டனர் .இதில், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன், மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன், மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். 

காணொளியின் தொடக்கத்தில், அனைவருக்கும் வணக்கம் என தமிழில் பேசிய பிரதமர் மோடி தமிழ் மொழியின் பழமையை குறித்து சிலாகித்தார். இந்த காணொளி காட்சியின்போது பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த நிர்வாகி சில கேள்விகளை எழுப்பினர். குறிப்பாக, கோவையில் இருந்து பேசிய பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி கவிதா, "நமோ செயலி இந்தியாவின் பல மாநிலங்களில் முழுமையாகச் சென்றடைந்த நிலையில், தமிழகம் உட்பட ஒரு சில இடங்களில் செயல்படாமல் உள்ளது. அதை செயல்பட செய்ய எது போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும்," என கேள்வி எழுப்பினார். 

அதற்கு பிரதமர் மோடி, "எல்லா துறைகளும் பாஜக ஆட்சியில் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது. அனைத்துத் தரப்பினரும் பாரதிய ஜனதா கட்சி உடைய செயல்பாடுகளை அனைத்துப் பகுதிகளுக்கும் கொண்டு செல்ல வேண்டும்," என பதிலளித்தார். 

மேலும், தொடர்ந்து பேசிய பிரதமர், "2010 -ம் ஆண்டு ரூ.86 ரூபாயாக இருந்த பாசிப்பருப்பின் விலை, 2018 -ம் ஆண்டு ரூ.90 முதல் ரூ.100 வரை உயருவதாக இருந்தது .ஆனால், தற்போது கட்டுக்குள் கொண்டு வந்து ரூ.70 முதல் ரூ.80 -க்குள் இருக்கிறது. மேலும், காங்கிரஸ் ஆட்சியின் போது இருந்த கல்வி கடன், வீட்டுக்கடன்களின் வட்டி விகிதம் தற்போது குறைந்துள்ளது.

காங்கிரஸ் அரசு ரூ.1.29 லட்சம் கோடி தான் விவசாயிகளின் வளர்ச்சிக்கு ஒதுக்கியது. ஆனால், பா.ஜ.க அரசு ரூ.2.11 லட்சம் கோடி நிதி ஒதுக்கியுள்ளோம். நாட்டின் பாதுகாப்பு மிக முக்கியம் என்பதால் நாட்டின் வளர்ச்சி, பாதுகாப்பின் மீது அதிக கவன செலுத்தி வருகிறோம். அதற்கான திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தி வருகிறோம். கடந்த 4 வருடங்களில் மாவோயிஸ்ட்டுகள் மற்றும் தீவிரவாதங்களில் இருந்தும் எந்த வித அச்சுறுத்தல்களும் ஏற்படவில்லை," என்றார் பிரதமர் மோடி. 

இதைப்போலவே, நீலகிரி மாவட்ட நிர்வாகிகளுடன் சுமார் 10 நிமிடங்களுக்கு மேல் பேசினார். அப்போது, நீலகிரி மாவட்ட தலைவர் நஞ்சுண்ட போஜன் பேசுகையில், "வரும் 2019-ம் ஆண்டு நடக்கும் பாராளுமன்ற தேர்தலில், நீலகிரி தொகுதியில் பாஜக. சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளரை வெற்றி பெறச் செய்வோம்," என்றார்.



மேலும், விவசாயம் மற்றும் விவசாயிகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து எதிர் கட்சிகள் பொய் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. இதனை எவ்வாறு சமாளிப்பீர்கள் என பிரதமரிடம் கேள்வி எழுப்பினார்.



"விவசாயிகள் நமக்கு அண்ணமிடும் கடவுள்கள். எனவே, இந்த அரசு விவசாயிகள் மற்றும் நடுத்தர மக்களுக்கு கடுமையாக உழைத்து வருகிறது. மேலும், விவசாயிகளின் நண்பனாகச் செயல்பட்டு அவர்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தப்படுத்தி வருகிறது," என்று பதிலளித்தார் பிரதமர். 

Newsletter

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...