திருப்பூர் : திருப்பூரில் நிரந்தர மற்றும் ஒப்பந்தத் துப்புரவு பணியாளர்களின் பணிகளைப் பார்வையிட்ட தேசியத் துப்புரவு தொழிலாளர் ஆணைய உறுப்பினர், ஒப்பந்த ஊழியர்களுக்குப் பணி நிரந்தரம் குறித்து தமிழக அரசை வலியுறுத்தப் போவதாக உறுதியளித்துள்ளார்.

ஜகதீஷ் ஹிர்மாணி தேசிய துப்புரவு தொழிலாளர் ஆணைய உறுப்பினர் ஆவார். இவர் இன்று திருப்பூர் மாவட்டத்தின் அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பணியாற்றும் துப்புரவு தொழிலாளர்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். அதற்கு பின் அரசு அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டார்.

இதையடுத்து, அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தேசிய துப்புரவு தொழிலாளர் நல ஆணையம் சார்பில் நாடு முழுவதும் துப்புரவு பணியாளர்களின் எண்ணிக்கை, மற்றும் அவர்களுக்கான வசதிகள் எந்தளவு பயன்படுத்தப்படுகிறது உள்ளிட்டவை பற்றி ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. மேலும், திருப்பூரில் பாதிக்கு பாதி பேர் ஒப்பந்த பணியாளர்களாக உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
அவர்களை பணி நிரந்தரமாக்குவது, ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்தி வழங்குவது குறித்து ஜனவரி மாதம் நடைபெறவிருக்கும் கூட்டத்தில் மாநில அரசை வலியுறுத்தவுள்ளேன். பாதாள சாக்கடை மற்றும் மனித கழிவுகளை சுத்தப்படுத்துவது ஆகியவற்றிற்காக இயந்திர ரோபாக்களை பயன்படுத்துவது குறித்து சோதனை நடைபெற்று வருகிறது. அவை சாத்தியமாகும்பட்சத்தில் திருப்பூரில் அம்முறை செயல்படுத்தப்படும்," என்றார்.

மேலும், இந்த ஆய்வுக் கூட்டத்திற்கு பின் தேசிய துப்புரவு தொழிலாளர் ஆணைய உறுப்பினரைச் சந்தித்து திருப்பூர் சி.ஐ.டி.யு துப்புரவு தொழிலாளர் சங்கத்தினர், துப்புரவு பணியாளர்களின் ஊதிய உயர்வினை அமல்படுத்த மாநில அரசை வலியுறுத்தும்படி மனு அளித்தனர்.