திண்டுக்கல் : தனியார் குவாரிகளில் மணல் என்ற பெயரில் தரமற்ற மண் விற்பனை செய்த குவாரிகளுக்கு சீல் வைத்து பழனி சார் ஆட்சியர் நடவடிக்கை மேற்கொண்டார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி பகுதியில் ஏராளமான கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. சமீப காலமாக கட்டிடம் கட்டுவதற்கு தேவையான ஆற்று மணலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனால் மணலுக்குப் பதிலாக எம் சாண்ட் மணல் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில், பழனி சார் ஆட்சியர் அருண்ராஜ் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் பழனி, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர் பகுதிகளில் செயல்பட்டு வரும் குவாரிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

இதன்படி, பழனியை அடுத்துள்ள சின்னக் கலையமுத்தூர், சுக்கம நாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் குவாரிகளில் சார்ஆட்சியர் ஆய்வு செய்தார். ஆய்வின் போது தரமற்ற எம்.சாண்ட் மற்றும் மணல் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்வது தெரியவந்தது. இதனையடுத்து, குவாரிகளுக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும், குவாரி உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.
இதுகுறித்து சார்ஆட்சியர் அருண்ராஜ் தெரிவிக்கையில், "தற்போது மணலுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக எம்.சாண்ட் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், எம்.சாண்ட் பயன்படுத்தத் தயங்கும் பொதுமக்களைக் குறிவைத்தே இதுபோன்ற முறைகேடு நடக்கிறது. கிராமத்திற்கு இது போன்ற மண்ணை அரைத்து, மணல் என்று விற்கின்றனர். இந்த மண்ணில் கட்டிடம் கட்டினால் ஒரு சில ஆண்டுகளிலேயே வீடு மற்றும் கட்டிடத்திற்கு பெரும் ஆபத்து ஏற்படும்.
எனவே, பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருந்து மணலுக்கு ஆசைப்படாமல், கருங்கல்லினால் தயாரிக்கப்படும் எம்.சாண்ட் மணலைப் பயன்படுத்தி பெரும் விபத்துகளைத் தவிர்க்கவேண்டும்," என தெரிவித்தார்.
மேலும், சார் ஆட்சியர் வருவது குறித்து அறிந்த குவாரி உரிமையாளர்கள் தலைமறைவானதால், முறைகேட்டில் ஈடுபட்ட குவாரிகளுக்கு சார்ஆட்சியர் சீல் வைத்தார். அதையடுத்து, தலைமறைவான குவாரி உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.